பூத் சிலிப் காட்டி ஓட்டளிக்க முடியாது! தேர்தல் அதிகாரிகள் திட்டவட்டம் Election 2019
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, வரும், 18ம் தேதி நடக்கிறது.
வாக்காளர், தங்களது வாக்காளர் அட்டையை பயன்படுத்தி, ஓட்டுப்பதிவு செய்யலாம். வரிசை எண், வாக்காளர் அட்டை எண், பாகம் எண் போன்ற விவரங்கள், ஓட்டுச்சாவடி விவரம் தெரிந்துகொள்ள, தேர்தல் கமிஷன் மூலம், போட்டோவுடன் கூடிய, 'பூத் சிலிப்' வழங்கப்பட உள்ளது.வாக்காளர் அட்டை இல்லாதவர்கள், சில தேர்தல்களில், 'பூத் சிலிப்'பை பயன்படுத்தி ஓட்டளித்தனர்.
மேலும், போட்டோ ஆதாரத்துடன் கூடிய, சில ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். ஆனால், இத்தேர்தலில், தேர்தல் கமிஷன் வழங்கும், 'பூத் சிலிப்'பை பயன்படுத்தி ஓட்டளிக்க இயலாது என, தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் கலெக்டர்அலுவலகத்தில் நேற்று நடந்த, வாக்காளர்கள் மற்றும் வாக்காளர்களின் தலைமை ஏஜன்டுகள் ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் பார்வையாளர்கள், திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பார்வையாளர் மாணிக் குர்ஷால் பேசுகையில், ''வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 'பாஸ்போர்ட்', 'டிரைவிங் லைசென்ஸ்', அரசு வழங்கிய போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகம் உள்ளிட்ட, 11 வகை ஆவணங்களை பயன்படுத்தலாம்.
தேர்தல் கமிஷன் வழங்கும், போட்டோவுடன் கூடிய 'பூத் சிலிப்' பை பயன்படுத்தி, ஓட்டளிக்க இயலாது. வாக்காளர் வரிசை எண், பாகம் எண் விவரங்களை சரிபார்க்கவே, 'பூத் சிலிப்' பயன்படுத்தப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment
Please Comment