அடுத்த ஆண்டு ஆன்லைனில் நடக்கும் முதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சலிங் Postgraduate Medical Study Counseling online next year
அடுத்த கல்வி ஆண்டில் மருத்துவ கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 1761 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களில் 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, 912 இடங்களுக்கான கவுன்சலிங் சென்னையில் நேற்று தொடங்கியது.
இதற்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 30ம் தேதி வெளியானது. இவற்றில் 558 இடங்கள் எம்டி படிப்புக்கும், 352 இடங்கள் எம்எஸ் படிப்புக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்று தொடங்கிய இந்த கவுன்சலிங் 4ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்றைய கவுன்சலிங்கில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடந்தது.
மதியம் தொடங்கிய கவுன்சலிங்கில் பொதுப்பிரிவினர் 468 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களில் எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலில் 6188 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அதில் முதல் 3 இடங்களில் அரசு மருத்துவர்கள் அருண்குமார், தமிழரசு, ஹேம்நாத் குமார், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அவர்களை தொடர்ந்து தரவரிசைப் பட்டியலில் அரசு மருத்துவர்களே அதிக அளவில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்டிஎஸ் இடங்களுக்கான தரவரிசைப் பட்டிலியல் 669 பேர் இடம்பெற்றுள்ளனர். வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங், ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
2ம் தேதிக்கான கவுன்சலிங்கில், அனைத்து பிரிவினரில் தரவரிசைப்படி 469ல் தொடங்கி கட்ஆப் மதிப்பெண் 759.6 முதல் 668.0 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்ற சுமார் 365 பேர் பங்கேற்க உள்ளனர். 3ம் தேதி 667.88 கட்ஆப் முதல் 600 வரை கட்ஆப் பெற்றவர்களுக்கு கவுன்சலிங் நடக்கிறது.

No comments:
Post a Comment
Please Comment