பி.இ, பி.டெக் படிப்பில் ‘லேட்ரல் என்ட்ரி’ ஒதுக்கீடு 10 சதவீதமாக குறைப்பு இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பி.இ, பி.டெக் படிப்பில் ‘லேட்ரல் என்ட்ரி’ ஒதுக்கீடு 10 சதவீதமாக குறைப்பு இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை

பி.இ, பி.டெக் படிப்பில் ‘லேட்ரல் என்ட்ரி’ ஒதுக்கீடு 10 சதவீதமாக குறைப்பு இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை 








 பிஇ, பி.டெக் படிப்பில் ‘லேட்ரல் என்ட்ரி’ ஒதுக்கீடு 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக் கப்பட்டுள்ளது. இப்புதிய நடை முறை இந்த ஆண்டு முதல் பின்பற்றப்பட உள்ளது. ஐடிஐ மாணவர்களும் பிளஸ் 2 மாணவர்களும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் லேட்ரல் என்ட்ரி முறையில் நேரடியாக 2 ஆண்டு சேர்ந்து படிக்கலாம். 3 ஆண்டுகள் கொண்ட பாலிடெக்னிக் படிப்பை அவர்கள் 2 ஆண்டுகளில் படித்து முடித்துவிடுவர். 






இதேபோன்று பாலிடெக்னிக் முடித்தவர்களும், கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்த பிஎஸ்சி பட்டதாரிகளும் லேட்ரல் என்ட்ரி முறையில் பிஇ, பிடெக் படிப்புகளில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்துவிடலாம். இவர்கள் 4 ஆண்டு கால பொறியியல் பட்டப் படிப்பை 3 ஆண்டுகளில் முடித்துவிடுவர்.



 இதுவரை பொறியியல் பட்டப் படிப்பில் லேட்ரல் என்ட்ரி முறைக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுவந்தன. இந்த நிலையில், 2019-2020-ம் கல்வி ஆண்டு முதல் 20 % இடங்கள் 10 சதவீதமாக குறைக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அறிவித் துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ள ஓர் அரசாணையில், அகில இந் திய தொழில்நுட்பக் கல்வி கவுன் சில் (ஏஐசிடிஇ) விதிமுறையின்படி, பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் லேட்ரல் என்ட்ரி திட்டத்துக்கு மொத்த இடங் களில் அதிகபட்சம் 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 



இப்புதிய நடைமுறை 2019-20-ம் கல்வி ஆண்டிலிருந்து பின்பற்றப் படும் என கூறப்பட்டுள்ளது. லேட்ரல் என்ட்ரி முறையில் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் அதில் தேவை யான எண்ணிக்கையில் மாணவர் கள் சேராததால் அந்த காலியிடங் கள் நிரப்ப முடியாமல் வீணாகின. இதைத் தடுக்கும் பொருட்டு ஐஏசிடிஇ நடைமுறையை பின்பற்றி ஒதுக்கீட்டு இடங்கள் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வித் துறை யினர் தெரிவித்தனர். இது குறித்து அனைத்து பொறியி யல் கல்லூரிகளுக்கும் தொழில் நுட்பக்கல்வி இயக்ககம் தகவல் அனுப்பியுள்ளது


No comments:

Post a Comment

Please Comment