பாதுகாப்பு குறைபாடு உள்ள பள்ளி வாகனங்களை சரிசெய்ய உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பாதுகாப்பு குறைபாடு உள்ள பள்ளி வாகனங்களை சரிசெய்ய உத்தரவு

பாதுகாப்பு குறைபாடு உள்ள பள்ளி வாகனங்களை சரிசெய்ய உத்தரவு



பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள பள்ளி வாகனங்களை சரிசெய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் 30,690 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு முன்பு அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கொளத்தூரில் ஆய்வு பாதுகாப்பு இல்லாத வாகனங் களை உடனடியாக சரிசெய்ய உத்தரவிடப்பட்டு வருகிறது. 



அந்த வகையில் சென்னையில் கொளத்தூர் மற்றும் அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பள்ளிகளின் வாகனங்கள் கொளத்தூரில் நேற்று ஆய்வு செய்யப்ப்பட்டன. ஆய்வின்போது, வாகனங்களில் அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதலுதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. வருவாய்த் துறை அதிகாரி பாரதிதேவி, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அசோக்குமார், தரன் வாகன ஆய்வாளர்கள் செழியன், லீலாவதி, ஆனந்தன், ஜெயலட்சுமி, ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். 



மொத்தம் 220 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பாதுகாப்பு குறைபாடு இருந்த 33 வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்கப்படவில்லை. அவசர கால கதவுகள், தீயணப்பு கருவிகளில் குறைபாடுகள் அதிகமாக இருந்ததை அதிகாரிகள் சுட்டிக்காட்டி உடனடி யாக சரிசெய்யவும் உத்தரவிட் டனர்.  


பாதுகாப்பு குறைபாடு உள்ள பள்ளி வாகனங்களை சரிசெய்ய உத்தரவு

No comments:

Post a Comment

Please Comment