வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழைக்கிறது பணியாளர் தேர்வாணையம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழைக்கிறது பணியாளர் தேர்வாணையம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழைக்கிறது பணியாளர் தேர்வாணையம்

>


தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி பயிற்சி அலுவலர்கள் பதவிக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த பணியிடங்கள் -13 


உதவி பயிற்சி அலுவலர் ( தலைமைச்செயலக பணி) -01 

 வயதுவரம்பு : 

பொதுப்பிரிவினருக்கு 35 வயது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு வயதுவரம்பு இல்லை. 


 கல்வித்தகுதி : 


>
உதவி பயிற்சி அலுவலர் ( English stenographer) - 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பில் தேர்ச்சி. தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சீனியர் பிரிவில் தேர்ச்சி சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சீனியர் பிரிவில் தேர்ச்சி உதவி பயிற்சி அலுவலர் ( தலைமைச்செயலக பணி) வணிக நடைமுறையில் டிப்ளமோ மற்றும் சுருக்கெழுத்து கூடுதல் தகுதி. 


சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரூ.35,900 முதல் ரூ.1,13,500 

 விண்ணப்பிக்கும் முறை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பதிவு செய்ய கட்டணம் ரூ.150. ஒருமுறை பதிவு செய்து நிரந்தர பதிவு எண்ணை பெற்று 3 ஆண்டுகளுக்கு எத்தனை தேர்வுகள் வேண்டுமானாலும் எழுதலாம். தேர்வுக்கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ.150. (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் இல்லை. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 முறை தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்கு.) 

 தேர்வு நாள் : ஜூன் 22,2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 

மே 20, 2019 மேலும் விபரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணவும்.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழைக்கிறது பணியாளர் தேர்வாணையம்

No comments:

Post a Comment

Please Comment