பெண்கள் வாகனம் ஓட்டும்போது கவனிக்க வேண்டியவை..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பெண்கள் வாகனம் ஓட்டும்போது கவனிக்க வேண்டியவை..!

பெண்கள் வாகனம் ஓட்டும்போது கவனிக்க வேண்டியவை..! 



கடந்த சில வருடங்களாக பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்திருக்கிறது, குறிப்பாக நகரப் பெண்கள். சற்று கூர்மையாகக் கவனிக்கும்பட்சத்தில், வெகு சில பெண்களே சரியாக வண்டி ஓட்டுகிறார்கள். இதற்கு காரணம் சரியான பயிற்சி மற்றும் புரிதலும் இல்லாமையே காரணம். கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் : வண்டியை எடுப்பதற்கு முன்பு எரிபொருள் இருக்கிறதா, டயர் நல்ல நிலையில் இருக்கிறதா, பிரேக் பிடிக்கிறதா என சரிபார்ப்பது மிகவும் அவசியம். 


>

 வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது உங்கள் கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உதாரணத்திற்கு வழி கேட்பவர்கள், சிக்னலில் பொருட்களை விற்பவர்கள். வண்டியை பார்க் செய்யும்போது எக்காரணம் கொண்டும் செல்போனில் பேசுவதை தவிர்த்து விடுங்கள். 



 இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் துப்பட்டா, புடவை உள்ளிட்ட ஆடைகளை சரியாக அணிந்து அல்லது முடிச்சு போட்டுக் கொண்டு வாகனம் ஓட்டுங்கள். கார் ஓட்டுபவரானால் சீட் பெல்ட் முக்கியம். வாகனத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் நடுசாலையில் இறங்கி பார்க்காதீர்கள். சாலை ஓரமாக நிறுத்தி பரிசோதியுங்கள். உங்கள் கைப்பை அல்லது விலை உயர்ந்த பொருட்களை காரின் முன் இருக்கையில் வைக்க வேண்டாம். 


திருடனின் பார்வையில் எளிதில் சிக்காமல் தப்பிக்க இது உதவும். வாகனத்தில் செல்லும்போது நீங்கள் எங்கு செல்கிறீர்கள், எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துச் செல்வீர்கள் என்பதை வீட்டில் இருக்கும் யாருக்காவது தெரிவித்துச் செல்லுங்கள். வெவ்வேறு சிறிய பணிகளுக்காக அடிக்கடி பயணம் மேற்கொள்ளாமல், ஒரே பயணத்தில் வேலைகளை முடித்துவிடுங்கள். 


>

எரிபொருளும் மிச்சம், உங்களுக்கு சாலையில் செல்லும் ரிஸ்கும் மிச்சம். காரில் உள்ள ஏ.சி. உபயோகத்தைக் குறைப்பதால் 8 சதவீதமும், தேவையில்லாத பொருட்கள் அல்லது எடையைக் குறைப்பதன் மூலம் 4 சதவீதமும் எரிபொருளை சேமிக்க முடியும். 


 மழைக்காலத்தில் மிதமான வேகத்தில் வாகனம் ஓட்டுங்கள். அலைப்பேசியை பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் ஒலி எழுப்புவதைக் கேட்க முடியாமல் போகும். சாலையில் செல்லும்போது சமிக்ஞை (சிக்னல்) விழுந்தால் உடனடியாக (சடன் பிரேக்) வண்டியை நிறுத்தாதீர்கள். அவ்வாறு செய்தால் பின்னால் வரும் வாகனம் உங்களின் மீது இடித்து விடும். எவரேனும் உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் ஒலி எழுப்பினால் வழிவிடுங்கள். 



உங்கள் வாகனத்தின் பக்கக் கண்ணாடியைப் பார்க்காமல் இடது, வலது புறம் திரும்பாதீர்கள். உங்களுக்கு முன்பு செல்லும் வாகனத்தை முந்த வேண்டும் என்றால் முதலில் வாகன ஒலி எழுப்பி, பின்பு வாகன வேகத்தைக் கூட்டி வலது புறமாக முந்துங்கள் பெண்கள் வாகனம் ஓட்டும்போது கவனிக்க வேண்டியவை..!

No comments:

Post a Comment

Please Comment