பள்ளியிலிருந்து உங்கள் குழந்தை வீடு திரும்பும் போது, சீருடையில் உணவுக் கறையுடன் வந்திருக்கிறதா? அந்த கறையை எளிதாக நீக்கும் யுக்திகளுடன் சில குறிப்புகள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளியிலிருந்து உங்கள் குழந்தை வீடு திரும்பும் போது, சீருடையில் உணவுக் கறையுடன் வந்திருக்கிறதா? அந்த கறையை எளிதாக நீக்கும் யுக்திகளுடன் சில குறிப்புகள்!

பள்ளியிலிருந்து உங்கள் குழந்தை வீடு திரும்பும் போது, சீருடையில் உணவுக் கறையுடன் வந்திருக்கிறதா? அந்த கறையை எளிதாக நீக்கும் யுக்திகளுடன் சில குறிப்புகள்! 

>


குழந்தைகள் எளிதில் அசுத்தம் செய்து விடக் கூடியவர்கள். எதையும் அவர்களால் தங்களைத் தாங்களே தடுத்து நிறுத்திக் கொள்ள முடிவதில்லை. குறிப்பாக, அவர்கள் சாப்பிடும் சமயங்களில் மிகவும் சோம்பேறித்தனமாகவும், அதிக அசுத்தத்தை ஏற்படுத்திக் கொள்பவர்களாகவும் இருப்பது இயல்பு. 



அதனால் ஏற்படும் கறைகளை எவ்வாறு நீக்குவது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்! அடுத்த முறை உங்கள் குழந்தை பள்ளியில் இருந்து உணவு கறைகளுடன் வீட்டிற்கு வரும் போது, மன அழுத்தம் கொள்ள வேண்டியதில்லை. இந்த வழிகாட்டி, 4 எளிய படிகளில் சீருடைகளை சுத்தம் செய்ய உதவும். 


 படி 1: 

>
 குளிர்ச்சியாக விழும் தண்ணீரில், துணியில் கறை படிந்த இடத்தை காட்டியபடி சிறிது நேரம் வைத்திருக்கவும். பின்னர், ஹைட்ரஜன் பெராக்சைடு, தண்ணீர் கலந்த கலவையை தயார் செய்யவும். தண்ணீர் கலந்து கொள்வதன் மூலம், துணியில் வண்ணங்கள் உள்ள பகுதி வெளுத்து விடாமல் பாதுகாக்கும். தோராயமாக 1 மடங்கு ஹைட்ரஜன் பெராக்சைடுடன் 9 மடங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் இரண்டையும் கலந்து கொள்ளவும். 


 படி 2: 


 ஹைட்ரஜன் பெராக்சைடு கரைசலில் கறைபடிந்த பகுதியை ஊற வைக்கவும். சில மணி நேரத்திற்கு அதை அப்படியே விட்டு விடவும். 


 படி 3: 


 மிதமான சூட்டுடன் கூடிய சுத்தமான தண்ணீரில் ஆடையை அலச வேண்டும். ஆடையின் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பராமரிப்பு வழிகளையும் நீங்கள் பின்பற்றுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

 படி 4: 


 தேவைப்பட்டால் படி 3ஐ மீண்டும் ஒருமுறை செய்யவும். பின்னர் உங்கள் வாஷிங்மெஷினில் சலவை பவுடரை போட்டு, வழக்கமான முறையில் துவைத்து எடுங்கள். 


 முக்கிய குறிப்பு: துணியை துவைப்பதற்கு முன்பாக, Surf Excel லிக்விட் டிடர்ஜென்ட் ஊற்றி கறை படிந்த இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். பள்ளியிலிருந்து உங்கள் குழந்தை வீடு திரும்பும் போது, சீருடையில் உணவுக் கறையுடன் வந்திருக்கிறதா? அந்த கறையை எளிதாக நீக்கும் யுக்திகளுடன் சில குறிப்புகள்!
>

No comments:

Post a Comment

Please Comment