உலகத்தின் பல பகுதிகளிலும் வானில் வித்தியாசமான ஒளி
உலகத்தின் பல பகுதிகளிலும் வானில் வித்தியாசமான ஒளியினை கண்ட மக்கள் அச்சமடைந்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவிஸில் திடீரென வானில் தோன்றிய ஒளியைக் கண்ட மக்கள் அவை ஏலியன்களாக இருக்கலாமோ என அச்சமடைந்தனர். எனினும் அவை செயற்கைகோள்கள் என்ற உண்மை தெரியவர, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்படுகின்றது.
தொழில்நுட்ப வல்லுநர் அலன் மஸ்கினால் இந்த செயற்கைகோள்கள் விண்ணிற்கு ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அலன் மஸ்க் உலகெங்கிலும் இணையத்தை அணுக இயலாத நிலையிலிருக்கும் மக்களுக்கு இணையவசதியை ஏற்படுத்துவதற்காக செயற்கை கோள்களை அனுப்பி வருகிறார்.
இதன் முதல் கட்ட நடவடிக்கையாக 60 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. அலன் மஸ்கின் கனவு நிறைவேற இன்னும் பல ஆயிரம் செயற்கை கோள்களை அனுப்பவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத்தின் பல பகுதிகளிலும் வானில் வித்தியாசமான ஒளி
No comments:
Post a Comment
Please Comment