பழநி சப்கலெக்டர் எச்சரிக்கை கல்வி நிலையங்களில் மின்னல் கருவி பொருத்த நடவடிக்கை தேவை
கோடை மழை மின்னல், இடியுடன் பெய்து வருவதால் கல்வி நிலையங்களில் மின்னல் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை மழை ஆகஸ்டு மாதம் வரை சாரலாக அவ்வப்போது பெய்தது. அதற்கேற்ப மின்னல், இடி, சூறாவளியின் தாக்கமும் இருந்தது. குறிப்பாக கன்னிவாடி, ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. இதில் திருமலைராயபுரம் பள்ளி மாணவர் முருகன் மின்னல் தாக்கி பலியானார்.
இதை தொடர்ந்து கல்வி நிலையங்களில் இயற்கை இடர்பாடு தடுப்பு கருவி பொருத்த கோரிக்கைகள் எழுந்தன. எனினும் பல கல்வி நிலையங்களில் இக்கருவி அமைப்பதில் தாமதம் காட்டி வருகின்றனர். தற்போது கோடை மழை பலத்த மின்னல், இடியுடன் பெய்து வருகிறது. இந்நிலையில் இக்கருவி இல்லாத அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை மும்முரமாக நடக்கிறது.
கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, சுகாதாரம் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுடன் மின்னல் தாங்கி கருவியின் அவசியத்தையும் அறிவுறுத்தி கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழநி சப்கலெக்டர் எச்சரிக்கை கல்வி நிலையங்களில் மின்னல் கருவி பொருத்த நடவடிக்கை தேவை
No comments:
Post a Comment
Please Comment