கோவை மாவட்டத்தில் இயற்பியல் பாடத்தில் 451 பேர் தோல்வி
கோவை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 451 பேர் இயற்பியல் தோல்வியடைந்துள்ளனர். பிளஸ் 1 பொதுத்தேர்வில் கோவை மாவட்டத்தில் பாட வாரியாக தோல்வியடைந்த மாணவர்கள் எண்ணிக்கை வருமாறு:
மொழிப்பாடத்தில் 33 ஆயிரத்தி 627 பேர் தேர்வு எழுதினர். இதில் 353 பேர் தோல்வியடைந்துள்ளனர். ஆங்கிலத்தில் 33 ஆயிரத்து 627 பேர் தேர்வெழுதியதில் 357 பேர் தோல்வியடைந்துள்ளனர். அதிகபட்சமாக இயற்பியல் பாடத்தில் 451 பேர் தோல்வியடைந்துள்ளனர்.
இதேபோல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் முறையே 126, 57, 42 பேர் தேர்ச்சி பெறவில்லை. புள்ளியியல் பாடத்தில் 93 பேர் தேர்ச்சி பெறவில்லை. மற்ற 11 பாடங்களை சேர்த்து மொத்தம் 1,289 பேர் தேர்ச்சி பெறவில்லை.கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் அதிகபட்சமாக ஆங்கில பாடத்தில் 917 பேர் தேர்ச்சியடையவில்லை.
கோவை மாவட்டத்தில் இயற்பியல் பாடத்தில் 451 பேர் தோல்வி
No comments:
Post a Comment
Please Comment