உலகெங்கும் வேகமெடுக்கும் மேக விதைப்பு... எதிர்காலத்தில் மழை மேகத்தால் போர் மேகங்கள் சூழ வாய்ப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உலகெங்கும் வேகமெடுக்கும் மேக விதைப்பு... எதிர்காலத்தில் மழை மேகத்தால் போர் மேகங்கள் சூழ வாய்ப்பு

உலகெங்கும் வேகமெடுக்கும் மேக விதைப்பு... எதிர்காலத்தில் மழை மேகத்தால் போர் மேகங்கள் சூழ வாய்ப்பு




உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தண்ணீர் பிரச்சனை தலைதூக்கி வருகிறது. இப்பிரச்சனையை சமாளிக்க பல்வேறு நாடுகளும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் ஒன்றாக மேக விதைப்பின் மூலம் செயற்கை மழை பொழிய செய்வது என்பது அதிகரித்து வருகிறது.மேக விதைப்பு என்ற முறையில், மேகங்களில் செயற்கையாக ரசாயன பொருட்களை கலந்து மழை பெய்யும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறார்கள். இதில் உபயோகப்படுத்துவது கார்பன்-டை-ஆக்ஸைடு, சில்வர் அயோடைடு அல்லது கால்சியம் குளோரைடு போன்ற வேதிப் பொருட்கள். 




இதில் ஒருவகை உப்புக்களை மேகங்களில் தூவினால் மேகத்தின் எடை அதிகரித்து மழையை வரவழைக்க செய்கிறார்கள். ஆனால், மழை பெய்ய சிறிய‌ வாய்ப்பு இருக்கும்போது இந்த மேகங்களை மேலும் வலுப்படுத்தி மழை பெய்ய வழிவகுக்கும்.உலகம் முழுவதும் இந்த நவீன முறையை 150க்கும் மேற்பட்ட நாடுகள் செயல்படுத்தியுள்ளது. 




ஆண்டுதோறும் இம்முறை செயல்படுத்துவது அதிகரித்து வருகிறது பல நாடுகள் சோதனை முயற்சியாகவும் சில நாடுகள் இதனை தொடர்ச்சியாக செயல்படுத்தி மழையை பெற்று வருகிறது. உலக அளவில் சீனா இதில் முதலிடம் வகிக்கிறது. 




அதிகபட்சமாக வருடத்திற்கு 90 மில்லியன் டாலர் செலவு செய்து 10 சதவீதம் கூடுதலாக மழையை பெறுவதாக சீனா சொல்கிறது. அமெரிக்கா 15 மில்லியன் டாலர் வரை செலவு செய்கிறது. ஜனவரி முதல் கடந்த மாதம் வரை ஐக்கிய அரபு அமீரகம் 88 முறை மேக விதைப்பு செய்து கூடுதல் மழையை பெற்றுள்ளது.சீனாவில் அதிகளவில் செயற்கை மழை வரவழைக்கப்படும் நிலையில் தங்கள் பகுதியில் பெய்ய வேண்டிய மழையை வேறு பகுதிக்கு கடத்திச் சென்று விடுவதாக ஏராளமான‌ விவசாயிகளிடமிருந்து உரத்த குரல் எழும்பியுள்ளது. 




தொடர்ந்து இது போன்று செய்வது இயற்கையான மழை சுழற்சியை பாதிக்கும் என இவர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில் தண்ணீருக்கான தேவை மிக கடுமையாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலையில் ஒரு நாட்டின் வான் பகுதியிலிருந்து மற்றொரு தரப்பின் வான் பகுதிக்கு செல்லும் மேகங்களை தடுத்து அந்த நாடு செயற்கை மழைக்கு பயன்படுத்தும் நிலை வரும்போது இரு நாடுகளிடையே போர் மேகமும் சூழலாம் என இயற்கை ஆய்வாளர்கள் என தெரிவிக்கின்றனர். 




க‌டந்த 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி தொடக்க நாளன்று சீனா அரசு ஏராளமான‌ சில்வர் அயோடைடு ஏவுகணைகளை வானுக்கு செலுத்தி பீஜிங் நகரில் மழைபெய்ய விடாமல் தடுத்ததாகவும் செய்தி உண்டு.ஒரு நாட்டின் வான் பகுதியிலிருந்து மற்றொரு தரப்பின் வான் பகுதிக்கு செல்லும் மேகங்களை தடுத்து அந்த நாடு செயற்கை மழைக்கு பயன்படுத்தும் நிலை வரும்போது இரு நாடுகளிடையே போர் மேகமும் சூழலாம். 




உலகெங்கும் வேகமெடுக்கும் மேக விதைப்பு... எதிர்காலத்தில் மழை மேகத்தால் போர் மேகங்கள் சூழ வாய்ப்பு

No comments:

Post a Comment

Please Comment