விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உர மானியம்: மத்திய அரசு பரிசீலனை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உர மானியம்: மத்திய அரசு பரிசீலனை

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உர மானியம்: மத்திய அரசு பரிசீலனை 


உர மானியத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. முன்னதாக, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல்கட்டமாக உர மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 


Read this also பள்ளி மாணவர்கள் இடை நிற்றலைத் தடுப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

அப்போது, உர நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் மானியம் செலுத்தப்பட்டது. இதற்காக ஒவ்வொரு உர நிறுவனமும் எந்த அளவுக்கு சில்லறை விற்பனையில் உரத்தை வழங்குகின்றன என்பது துல்லியமாக கணக்கெடுக்கப்பட்டது. இந்நிலையில், இப்போது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உர மானியத்தை செலுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய உரத் துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உர மானியத்தை நேரடியாக செலுத்தலாம் என்று நீதி ஆயோக் ஏற்கெனவே பரிந்துரைதுள்ளது குறிப்பிடத்தக்கது. 



மத்திய அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.70,000 கோடிக்கு உர மானியமாக அளித்து வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் இப்போது 2.25 லட்சம் உர விற்பனையகங்கள் உள்ளன. இப்போது பிஓஎஸ் எனப்படும் பற்று அட்டைகளைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்யும் இயந்திரம் மூலம் மானியம் கணக்கிடப்படுகிறது. 



விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்த வேண்டும் என்றால், அதனைக் கணக்கில அனைத்து உர விற்பனையகங்களிலும் கணினி அல்லது மடிக்கணினி வசதி தேவை. 2018-19 நிதியாண்டில் ரூ.74,000 கோடி உர மானியம் அளிக்கப்பட்டது. 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.78,000 கோடியாக உர மானியம் இருக்கும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உர மானியம்: மத்திய அரசு பரிசீலனை

No comments:

Post a Comment

Please Comment