அதிகாலையில் சேவல் கூவுவது சரியா?- பிரான்சில் நீதிமன்றத்தில் வழக்கு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அதிகாலையில் சேவல் கூவுவது சரியா?- பிரான்சில் நீதிமன்றத்தில் வழக்கு

அதிகாலையில் சேவல் கூவுவது சரியா?- 



பிரான்சில் நீதிமன்றத்தில் வழக்கு அதிகாலையில் சேவல் கூவுவது சரியா?- பிரான்சில் நீதிமன்றத்தில் வழக்கு பிரான்சின் மேற்கு கடற்கரை அருகே உள்ள 'ஒலேரான்' தீவைச் சேர்ந்த ஒருவர் அதிகாலையில் சேவல் கூவுவது தனக்கு இடையூறாக இருப்பதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், 


விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த பெண்ணுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. வழக்கு தொடர்ந்தவர் செயிண்ட்-பியெர்ரெ-ஒலெரான் தீவில் உள்ள தனது சொகுசுப் பங்களாவில் விடுமுறையை கொண்டாட வந்தவர். இதுகுறித்து பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கூறுகையில், 



நான் இங்கு 35 ஆண்டுகளாக வசித்து வருகிறேன், அவர்கள் ஆண்டிற்கு இருமுறை வருபவர்கள், என்றார். செயின்ட்-பியெர்ரெ-ஒலெரான் தீவின் மேயர் கிறிஸ்டோப் சியர் கூறுகையில், 'இன்று சேவல் கூவும் சத்தம், நாளை கடற்பறவைகளின் சத்தம், அதன்பின் காற்றின் சத்தம்… ஏன் நாங்கள் பேசுவதையும் குற்றம் சொல்வார்களா' என்று சாடினார்.

No comments:

Post a Comment

Please Comment