இன்சுலின் செடியின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இன்சுலின் ஊசி போடுவது அனைவரும் அறிந்ததே!. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் செடியின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?.
• மனிதர்களின் கண், நரம்பு, தோல், எலும்பு, கிட்னி என ஒவ்வொரு உறுப்பாகப் பாதித்து அணு அணுவாகச் சித்ரவதை செய்யக்கூடியது சர்க்கரை நோய்.
• சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் வலியிலிருந்து விடுதலை தருகிறது 'காஸ்டஸ் பிக்டஸ்' என்ற இன்சுலின் செடி.
• ஒரு கொத்து இன்சுலின் இலைகள் மற்றும் ஒரு பிடி கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதனுடன் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் இதை காலை மாலை என இரு வேளைகளிலும் பருகி வர வேண்டும். இந்த கஷாயத்தை குடிப்பதால் சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது.
• வெறும் வயிற்றில் இன்சுலின் செடியிலிருந்து இலைகளை எடுத்து மென்று சாற்றினை விழுங்கி விட்டு சக்கையை துப்பி விட வேண்டும். இவ்வாறு நாம் செய்யும் போது உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
• தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாகக் குறைக்கிறது.

No comments:
Post a Comment
Please Comment