உங்கள் ஸ்மார்ட்போனிடம் நீங்கள் ஸ்மார்ட்டாக இருக்கிறீர்களா?
பல ரெவ்யூகளை படித்தும் உங்களது 'டெக்கி' நண்பர்களிடம் இது பற்றி விவாத்தித்தும் அதன் குறிப்பீடுகளை மீண்டும் மீண்டும் படித்தும் எந்த ஸ்மார்ட்போனை வாங்குவது என முடிவு செய்து பின்னர் வாங்குகிறீர்கள். நல்ல முடிவு தான். இப்போது மொபைல் டெக்னாலஜி வழங்கும் அனைத்தும் உங்கள் கையில் அதாவது - ஃபாஸ்ட் பிராசஸர், ஹை டெஃபினெஷன் ஸ்கிரீன், அற்புதமான கேமரா - ஆனால் இத்தனை ஃபீச்சர்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் முழுமையாக நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?
உங்களது ஸ்மார்ட்போன் பயன்பாட்டினை ஸ்மார்ட்டாக மாற்றவும் நீங்கள் அதில் செய்ய நினைப்பவற்றை வேகமாகவும், எளிதாகவும் அதிக செயல்திறனுடன் செய்யவும் உதவும் சில வழிகள் இதோ.
எங்கிருந்தபடியும் வேலையை முடிக்கலாம்
மொபைல் பேங்கிங் மற்றும் வாலெட்ஸ் டிஜிட்டல் டிரான்ஸாக்ஷன்ஸ்-ஐ எளிதாக்குகின்றன.
ஸ்டாக் டிரேடிங், உங்களது குழந்தையின் ஸ்கூல் ஃபீஸ் அல்லது உங்களது பிசினசின் புதிய ஆர்டர்களை பெறுதல் இப்படி நீங்கள் எதை செய்வதானாலும் ஸ்மார்ட்போன் என்பது உங்களது பேங்கை பாக்கெட்டில் கொண்டு செல்வது போல எளிதாக்கிவிட்டது. மணி டிரான்ஸ்ஃபர்ஸ் மற்றும் இதர டிரான்ஸாக்ஷன்ஸ் செய்வது என்பது உங்களது மொபைலில் சரியான ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் கையாளுவது மிக எளிது.
மேலும் முக்கியமாக, உங்களிடம் ஸ்ட்ராங் நெட்வொர்க் இருப்பது மிக அவசியம். இதன் மூலம் உங்களது பரிவர்த்தனைகளை செல்லுமிடம் எங்கும் திறன்பட செய்து முடிக்கலாம். ஏர்டெல் 4G போன்ற ஒன்று, நாட்டில் 90% க்கும் மேற்பட்ட கவரேஜை கொண்டுள்ளதாக ஊக்லா கூறுகிறது.
எல்லையற்ற என்டர்டெயின்மெண்ட்
வேலை மற்றும் பயணம் செய்த களைப்பினை நீக்கி புத்துணர்ச்சியளிக்க ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த வழியாகும். லேட்டஸ்ட் மூவீஸ், ஷோஸ், ஸ்டாண்ட்-அப் வீடியோஸ், லைவ் டீவி என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களை பல ஆப்ஸ் வழங்குகின்றன.
அவற்றை உங்கள் விரல் நுனியில் எளிதாக ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். பஃபரிங் சிக்கலின்றி வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய உங்களுக்கு தேவை வேகமான இன்டர்னெட் சேவையையை வழங்கும் ஒரு நெட்வொர்க் தான். ஏர்டெல் 4G யை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அது தொடர்ந்து அதி வேகமான 4G மொபைல் நெட்வொர்க்கை பெரும்பாலான இந்திய மாநிலங்களில் வழங்குவதாக ஊக்லா தெரிவிக்கிறது.
இதன் மூலம் இடைவெளியற்ற ஸ்ட்ரீமிங்கை உங்கள் மொபைலில் பெற முடியும்.
உங்கள் வீட்டை ரிமோட் கன்ட்ரோல் செய்யலாம்
இன்டர்னெட் ஆஃப் திங்ஸ் ஏற்கனவே உள்ளது, மற்றும் உங்கள் ஸ்மார்ட்போன் உங்களது ஹோம் லைஃபை எளிதாகவும் பாதுகாப்பானதாகவும் ஆக்க தயாராக உள்ளது. ஹோம் செக்யூரிட்டி மற்றும் மானிட்டரிங் சிஸ்டம்ஸ் உங்களது போனுக்கு ஒரு நவீன ஆப் மூலம் அலர்ட் அனுப்பி நீங்கள் எங்கிருந்தாலும் உங்களது வாழ்க்கையை எளிதாக்கி பாதுக்காப்பாக உணர வைக்கிறது.
மேலும், பல்வேறு டிவைஸ்கள் மற்றும் அப்ளயன்ஸ்கள், லைட்ஸ் மற்றும் தெர்மோஸ்டாட்கள் முதல் திரைசீலைகள் வரை அனைத்தையும் எங்கிருந்தபடியும் (உங்கள் விரல் நுனியில்) இயக்க உதவுகின்றன. இவற்றை சரியாக செயல்படுத்த உங்களது மொபைலில் சரியான ஆப் மட்டுமே தேவை.
புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுதல்
இன்டர்னெட்டில் ஏராளமான வெப்சைட்டுகளும் ஆப்களும் உள்ளன. அவற்றில் இருந்து நீங்கள் ஆன்லைன் கோர்ஸ்களை எடுத்துக்கொண்டு புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும். பைஜூ'ஸ், டாப்பர் போன்ற ஆப்களில் இருந்து மாணவர்கள் கல்வி தொடர்பான புதிய விஷங்களை கற்கலாம் அல்லது டூவோலிங்கோ போன்ற ஆப்களின் மூலம் வெளிநாட்டு மொழிகளை கற்கலாம்.
உங்களது மொபைல் போனே கிளாஸ் ரூம் ஆக மாறி உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்து ஆன்லைன் கோர்ஸ்களை எடுத்துக் கொள்ள உதவும்.
உங்கள் லைஃப்ஸ்டைலை டிராக் செய்யலாம்
போன் நம்மை சோம்பேறியாக ஆக்கினாலும், உங்களது மொபைலில் பெர்சனல் லைஃப்ஸ்டைல் டிராக்கர் ஆப் இருந்தால் அதனை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். டவுன்லோட் ஆப்ஸ் உங்களது வொர்கவுட்டுக்கு உதவி உங்களது முன்னேற்றத்தை டிராக் செய்து உங்களது பெர்சனல் டிரெயினர் போல செயல்படுகிறது.
சில ஆப்ஸ் உங்களது டயட்டை பிளான் செய்யவும், நீங்கள் எடுத்துக்கொள்ளும் திரவ அளவினை கண்காணிக்கவும் செய்து உங்களை ஆரோக்கியமான லைஃப்ஸ்டைலை நோக்கி நகர்த்த உதவுகிறது. இத்தனை அருமையான செயல்பாடுகளை கொண்ட ஸ்மார்ட்போன் உங்களை நிஜமாக ஸ்மார்ட்டாக மாற்றுகிறது!
RSS ஃபீட்ஸ் ஐ பயன்படுத்துதல்
இதோ ஒரு ஸ்மார்ட் டிப் - நீங்கள் பயன்படுத்தும் பல நியூஸ் வெப்சைட்களில் இருந்து வரும் பாப் அப் அறிவிப்புகளை நிறுத்திவிடுங்கள். அதற்கு பதில் ஒரு RSS ரீடர் ஆப் ஐ பயன்படுத்தினால் அது உங்களது ஸ்மார்ட்போன்களில் நீங்கள் பெறும் தகவல்களின் தரத்தை அதிகரிக்கும். RSS ஃபீட்ஸ் தேவையற்ற செய்திகளை வடிகட்டி உங்களுக்கு விருப்பமான தகவல்களை மட்டுமே தந்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.
ஸ்மார்ட்டான பயணம், பாதுகாப்பான பயணம்
ஆக்மெண்டட் ரியாலிட்டி GPS மேப்ஸ் தற்போது உள்ளதால் பயணம் செய்யும்போது அதனை உங்கள் விண்ட்ஸ்கிரீனில் புரொஜெக்ட் செய்து உங்களுக்கு அறிமுகம் இல்லாத சாலைகள் மற்றும் மோசமான வானிலை ஆகியவற்றை பற்றிய தகவல்களை உங்கள் போன் மூலம் பெறலாம்.
நீங்கள் பொது போக்குவரத்தினை இரவில் பயன்படுத்தும்போது அல்லது பாதுகாப்பின்றி உணரும்போது, உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை டிராக் செய்யவும் எமர்ஜென்சியின் போது அவர்களை தொடர்பு கொள்ளவும் ஆப்ஸ் உள்ளன.
முன்பு இருந்ததை விட அடுத்து வரும் ஸ்மார்ட்போன்கள் ஸ்மார்ட்டாகி வரும் இந்த உலகில் அதன் நன்மைகளை நீங்கள் முழுமையாக பயன்படுத்தாவிட்டால் என்ன பயன். எனவே உங்கள் ஸ்மார்ட்போனை முழுமையாக பயன்படுத்தி ஸ்மார்ட் ஆகுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனிடம் நீங்கள் ஸ்மார்ட்டாக இருக்கிறீர்களா?
No comments:
Post a Comment
Please Comment