20 ரூபாய் நாணயம் விரைவில் வெளியாகும் - மத்திய அரசு அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் 2019-20ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மோடி தலைமையில் புதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மக்களுக்குப் பயனளிக்கும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது, அதில் புதிய ரூபாய் நாணயங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய நாணயங்கள் புழக்கத்திற்கு விடப்படுகிறது. இவற்றில் ரூ.20 நாணயம் முதல்முறையாக பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்த நாணயங்களை கடந்த மார்ச் 7ஆம் தேதியே பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்துவிட்டார். இந்நிலையில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பார்வை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய நாணயங்கள் அமையும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் ரூ.20 நாணயம் 12 பக்கங்களுடன், காப்பர் - ஜிங்க்- நிக்கல் உலோகக் கலவையால் செய்யப்பட்டிருக்கும்.
புதிய நாணயங்களில் அசோகத் தூண், "சத்யமேவ ஜெயதே" என்ற வரிகள், "பாரத்", இந்தியா" ஆகிய பெயர்கள் இடம்பெற்றிருக்கும். தற்போது 13 வகையான ரூ.10 நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன.
இது குறித்து மக்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

No comments:
Post a Comment
Please Comment