சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றிய சேலம் அரசு பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றிய சேலம் அரசு பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள்!

சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றிய சேலம் அரசு பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள்!




சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் உலோகவியல் துறையில் படித்த 13 பேர் சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றியுள்ளனர். சந்திரயான்-2 விண்கலம் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 22) ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3- எம்.1 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-2 திட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு குழுக்களாகச் செயல்பட்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவி, உலக நாடுகளை தம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். 




அதே வேளையில், சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் உலோகவியல் துறையில் பல்வேறு காலக் கட்டங்களில் படித்த 13 பேர் சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றியுள்ளனர். அவர்களின் விவரம்: எம்.ஆறுமுகம் (1987), இளமுருகு (2000), எம்.கே.கார்த்திகேயன் (2002), டி.வெங்கடேஸ்வரன் (2002), சுரேஷ்குமார் (2002), பிரகாஷ் (2002), பிரபா (2004), அரவிந்த்ராம் (2004), கே.சரவணன் (2005), அகிலன் (2010), சந்தோஷ்குமார் (2012), சிவராமசுதன் (2013), ஐஸ்வர்யா (2014) என 13 பேர் சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றியது தெரியவந்துள்ளது. 




மேலும், நிலவில் பயணிக்கும் சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகிய உபகரணங்கள் தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டம், சித்தம்பூண்டி குன்னமலை கிராமத்தில் கிடைத்த அனார்தசைட் மண் மாதிரியில் இயக்கி பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அனார்தசைட் மண் நிலவின் பரப்பில் உள்ளது போன்றதாகும்.

No comments:

Post a Comment

Please Comment