கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது!
2019-2020 ஆம் ஆண்டு கால்நடை மருத்துவ இளநிலைப் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த கல்லூகளில் 2019-20 ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளில் உள்ள 460 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதற்கான விண்ணப்பதிவு கடந்த மே 8 ஆம் தேதி முதல் ஜூன் 17 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 27ஆம் தேதி வரை நடைபெறும் இந்துகலந்தாய்வில் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment