அன்னாசிப்பழம் மூலம் கிடைக்கும்
நன்மைகள் நோயெதிர்ப்பு
சக்தி
அன்னாசியில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும். இதனால் உடலில் நோய்களின் தாக்கம் குறையும்.
செரிமானம்
செரிமான பிரச்சனை இருந்தால், ஒரு கப் அன்னாசிப் பழத்தை சாப்பிடுங்கள். இதனால் உடனே உங்கள் செரிமான பிரச்சனை நீங்கும்.
சளி மற்றும் இருமல்
அன்னாசியில் வைட்டமின் சி, புரோமெலைன் போன்றவை அதிகம் இருப்பதால், இவை நுண்ணுயிர் தொற்றுகளை எதிர்த்துப் போராடும்.
அதிலும் சளி, இருமல் போன்றவற்றின் போது அன்னாசிப்பழம் சாப்பிட்டால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
எலும்புகளை வலிமையடையும்
அன்னாசிப்பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அவை எலும்புகளை வலிமையாக்குவதோடு, இணைப்புத் திசுக்களையும் வலிமையாக்கும். ஒரு கப் அன்னாசிப்பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான 73% மாங்கனீசு நிறைந்துள்ளது.
ஆரோக்கியமான ஈறுகள்
அன்னாசப்பழம் சாப்பிட்டால், ஈறுகள் வலிமையடைவதோடு, பற்களும் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்
சைனஸ், தொண்டைப்புண்
சைனஸ், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் சக்தி அன்னாசிப்பழத்திற்கு உள்ளது.
இதற்கு அதில் வளமாக நிறைந்துள்ள புரோமெலைன் தான் காரணம்.
புற்றுநோய் எதிர்ப்பு பொருள்
அன்னாசிப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதன் மூலம் புற்றுநோய் உருவாவது தடுக்கப்படும்.



No comments:
Post a Comment
Please Comment