பிளாஸ்டிக்குக்கு மாற்றாக துணிப்பை அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பிளாஸ்டிக்குக்கு மாற்றாக துணிப்பை அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு!

பிளாஸ்டிக்குக்கு மாற்றாக துணிப்பை அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு! 


முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில்தான் மாணவர்களை ஊக்கப்படுத்தி தங்களது சொந்த முயற்சியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 



அதன்படி மாணவர்கள் துணிப்பைகளை தயார் செய்வதுடன் துணிப்பையில் நீர் மேலாண்மை, நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்களையும் சொந்தமாகவே அச்சிடும் முறையை கற்றுக்கொண்டு தயார் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நெகிழிக்கு மாற்றாக மாணவர்களே தயாரிக்கும் துணிப்பை கண்காட்சி நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் இடம்பெற்றது. இதனை ஆச்சரியத்துடன் பார்த்த கலெக்டர் ஆனந்த், எஸ்பி துரை ஆகியோர் மாணவர்களையும் இதற்கு உதவியாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டினார்.

No comments:

Post a Comment

Please Comment