"கல்வி உதவித் தொகை பெற சிறுபான்மைப் பிரிவு மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம்'
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மைப் பிரிவு மாணவர், மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிப்போருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2019-2020ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகள் கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயிலுபவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு, கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலுபவர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு தகுதியான மாணவர், மாணவிகள் அக். 15ஆம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு தகுதியானவர்கள் அக். 31ஆம்தேதி வரையிலும் இணைய தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து கல்வி நிலையத்துக்கு அனுப்பாத மாணவர், மாணவிகளின் இணைய தள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு www.bcmbcmw.tn.gov.in/ welfschemes_minorities.htm மற்றும்
என்ற இணையதளத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment