இன்றைய கல்விசெய்திகள், 10.10.19(வியாழக்கிழமை)
🎀🎀பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் அக்., 26, 27 (சனி,ஞாயிறு) ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை. அக்., 28(திங்கட்கிழமை) ம் தேதி வேலைநாள் என்பதால், அந்த நாளில் விடுமுறை விட விரும்பும் பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் அனுமதிப்பெற்று விடுமுறை விடலாம். அவ்வாறு வேலைநாளில் விடுமுறை விடும் பள்ளிகள், ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கலாம். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
👉திருத்தப்பட்ட அக்டோபர் மாத கால அட்டவணை வெளியீடு
🎀🎀மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல்
🎀🎀அனைத்து அரசுப் பள்ளிகளில் 6 மாத காலத்தில் கணினி வசதி ஏற்படுத்தப்படும்- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
🎀🎀பள்ளிக் கல்வித் துறையால் மறு நியமனம் (Extension) மறுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு (வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும்) மறு நியமனம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
🎀🎀ஆசிரியர் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல் 🎀🎀நீட் கல்வி வணிகமாகியுள்ளது, இது கூட்டாசச்சி தத்துவத்திற்கு எதிரானது."
கல்வியாளர் _பிரின்ஸ் கஜேந்திர பாபு
🎀🎀முதன்மை கல்வி அலுவலர்/ துணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பதவிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக மாறுதல் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பதவிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கி ஆணை வெளியீடு
🎀🎀இந்து குழுமத்திலிருந்து வெளியாகும் வெற்றிக்கொடி நாளிதழால் மாணவர்கள் திறன் மெருகேறும்: முதல் பிரதியை வெளியிட்டு அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து
🎀🎀பேருந்து வசதியே இல்லாத கடைக்கோடி கிராமங்களில் ஆசிரியர்கள் 9 மணிக்குள் வருவது அவர்கள் கையில் இல்லை, குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வரும் கிராமப் பேருந்து ஓட்டுனர்கள், ஷேர் ஆட்டோக்கள் வருகைப்பதிவை தீர்மானிக்கின்றன.பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் -மணி கணேசன்.
🎀🎀திருவலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ராஜ்ய புரஸ்காா் மாநில விருது வழங்கப்பட்டுள்ளது.
பாரத சாரண, சாரணிய இயக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு ராஜ்ய புரஸ்காா் விருது தமிழக ஆளுநரால் வழங்கப்படுகிறது.
🎀🎀யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு, வரும், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற, சுகாதாரத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
🎀🎀அடுத்த ஆண்டு (2020) முதல் எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
🎀🎀மத்திய மனிதவளத் துறை சார்பில், நன்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க, ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். இத்தேர்வுக்கு பிரத்யேக பயிற்சி கிடைக்குமா என்று மாணவர்கள் எதிர்பார்ப்பு
🎀🎀ஒரே மாவட்டங்களில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் காவல்துறை உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.
🎀🎀சென்னையில் பேனர் விழுந்து நிகழ்ந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி அவரின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 🎀🎀விஞ்ஞானத்தில் சிறந்து விளங் கும் 100 அரசுப் பள்ளி மாணவர் கள் மற்றும் 100 கல்லூரி மாணவர்கள் இஸ்ரோவை பார்வையிட அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தகவல்.
🎀🎀சென்னை, இராமநாதபுரம், அரியலூர் ஆகிய 3 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் துணை இயக்குநர் ( மின் ஆளுமை) மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
🎀🎀உள்ளாட்சி தேர்தலுக்கு தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
🎀🎀சிறப்பாசிரியர் நியமனம் ! இறுதிப்பட்டியலில் குளறுபடி உள்ளதாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கலையாசிரியர் நலச்சங்கம் புகார்!
🎀🎀ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை பெற ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு.
பிரதமர் நரேந்திர மோடியின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
🎀🎀டிசம்பர் மாதம் நடைபெறும் NET Exam 2019 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.9) கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில், தற்போது நெட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் அக்டோபர் 15 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது 🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
🌹🌹ஜியோ கட்டண மாற்றங்கள் பற்றிய அறிவிப்பு
🌹👉1. ஜியோவிலிருந்து ஜியோ நம்பருக்கு அழைப்பதற்கு இலவசமே மற்ற ஆப்பரேட்டர்களுக்கு அழைப்பதற்கு மட்டுமே 6 பைசா ஒரு நிமிடத்திற்கு சார்ஜ் செய்யப்படும்
👉2.ஜியோ இதுவரை (மற்ற ஆப்பரேட்டர்களுக்கான கட்டணம்) இந்த கட்டணத்தை தானே ஏற்றுக்கொண்டது
👉3.அரசாங்க விதிமுறைகளால் ஜியோ இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் கட்டாயத்தில் உள்ளது
👉4.இந்த கட்டணத்தை டிசம்பர் 2019 முதல் அரசாங்கம் தள்ளுபடி செய்வதாக இருந்தது, இப்போது இதை அமுல் செய்யாத காரணத்தால் ஜியோவிற்கு மாதம் ரூபாய் 200 கோடி செலவு ஆகிறது
👉5.இந்த கட்டணம் தற்காலிகமானதே, அரசாங்கம் இந்த கட்டணத்தை தள்ளுபடி செய்யும் வரை தொடரும்
👉6.சாதாரணமாக ஒரு வாடிக்கையாளருக்கு 10 ரூபாய்க்கும் குறைவாகவே செலவு ஆகும்
👉7.இந்த கட்டணத்தை ஈடு செய்வதற்காக அதற்கு இணையான டேட்டாவை ஜியோ வழங்குகிறது. ஒவ்வொரு 10 ரூபாய் ரீச்சார்ஜிற்கும் 1 GB டேட்டா கிடைக்கும்* (மற்ற ஆப்பரேட்டர்களை ஒப்பிடும் பொழுது குறைவான கட்டணமே)
👉8.மற்ற ஆப்பரேட்டர்களும் இன்னும் சில நாட்களில் இதே முறையை கடைபிடிக்க கூடும்
👉9.ஜியோவில் இருந்து ஜியோவிற்கு அழைப்பது எப்போதும் இலவசமே
👉10.ஜியோ உங்களின் அபிமான ஆப்பரேட்டராக தொடர்ந்து செயல்படும் என்று உறுதியளிக்கிறது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:
Post a Comment
Please Comment