🏵பதில்🏵
👉கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் நஞ்சுக்கொடி (placenta) வழியாக கருப்பையிலிருந்து (Womb) நேரடியாக வழங்கப்படுகிறது.
👉கருப்பையில் குழந்தையின் உடல் வளர்ச்சியில், கடைசியாக முதிர்ச்சியடையும் உறுப்பு நுரையீரலே(lung) ஆகும்.
👉குழந்தை பனிக்குடத்தில்(sac) அம்னோடிக் திரவத்தால்(Amniotic liquid) முழுமையாக மூடப்பட்டிருப்பதால், நுரையீரலை சுவாசிக்க பயன்படுத்துவதில்லை.
👉இதனால் அனைத்து ஊட்டச்சத்து(Nutrition) மற்றும் ஆக்ஸிஜன் (oxygen) சப்ளை தொப்புள்tk கொடி (umbilical cord) மற்றும் நஞ்சுக்கொடி வழியாக குழந்தையின் உடலை நேரடியாக அடைகிறது.
👉பச்சிளங்குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி துண்டிக்கப்படுகிறது.
இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தினால் குழந்தை நுரையீரல் வாயிலாக சுவாசிக்க துவங்குகிறது.
👉சிறிய அளவிலான பனிக்குட திரவம் மற்றும் சளி(Mucus) நுரையீரல், காற்றுப்பாதை (Airway), நாசி(nostril) மற்றும் வாயில் கூட இருக்கும்.
👉இது வெளியேற்றப்பட வேண்டும் மற்றும் சுவாசம் நடைபெற பாதைகள் சரிசெய்யப்பட வேண்டும்.
👉குழந்தையின் அழுகையானது சுவாசப் பாதை திரவம் மற்றும் சளியை வெளியேற்றுவதற்கான (Expelled) ஒரு முயற்சியாகும்.
👉அதனால்தான் முதல் அழுகை வழக்கமாக ஒரு கர்ஜனையுடன்(gurgle) அழத்தொடங்கி பின்னர் எளிதாக சுவாசிக்கத் தொடங்குகிறது.
🏵மேலும் அறிக🏵
👉புதிதாகப் பிறந்த குழந்தை உண்மையில் முதல் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு கண்ணீர் விடுவதில்லை. ஏனெனில் அவற்றிற்கு கண்ணீர் குழாய்கள் உருவாகாமல் இருப்பதேயாகும்.
👉சில குழந்தைகளுக்கு நான்கு மாதங்களுக்கு பிறகே கண்ணீர் குழாய்கள்(tear ducts) உருவாகின்றது.
🙏நன்றி
💐இனிய காலை வணக்கம்🙏💐

No comments:
Post a Comment
Please Comment