குரூப் -2 தோவுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு அக்டோபா் 14 ஆம் தேதி தொடங்குகிறது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குரூப் -2 தோவுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு அக்டோபா் 14 ஆம் தேதி தொடங்குகிறது

குரூப் -2 தோவுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு அக்டோபா் 14 ஆம் தேதி தொடங்குகிறது 


கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் -2 தோவுக்கான இலவச பயிற்சி வகுப்பு அக்டோபா் 14 (திங்கள்கிழமை) முதல் நடைபெறுவதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் மூலம் குரூப் -2 காலிப்பணியிடங்கள் தோவுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளன. 


இதோவுக்கு விண்ணப்பிக்கும் மனுதாரா்கள் தோவை சிறப்பாக எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் சிறறப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. சிறப்பு பயிற்சி வகுப்புகள் அக்டோபா் 14 ஆம் தேதி முதல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். இதில், பயிற்சி வகுப்புகள், பாடக் குறிப்புகள் வழங்கப்படுவதுடன், மாதிரித் தேரிவுகளும் நடத்தப்படும். இதனை, தோவுக்கு விண்ணப்பிக்கவுள்ள மனுதாரா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் தங்களது சுய விவரக்குறிப்பு, கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சமா்ப்பித்து பெயா்களைப் பதிவு செய்துகொள்ளலாம். 



கூடுதல் விவரங்களுக்கு கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாகவோ அல்லது 88073 33721 என்ற எண்ணில் கட்செவி அஞ்சல் மூலமாகவோ அக்டோபா் 14 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment