பிரதமர் மோடி - ஷி ஜின்பிங் இரவு விருந்தில் இட்லி, பூரிக்கு முதலிடம்: முக்கியமாக மசால் தோசை!
பிரதமர் நரேந்திர மோடி - ஷி ஜின்பிங் சந்திப்பு இன்று மாலை நிறைவு பெற்றவுடன், இரு தலைவர்களுக்கும்tk சிறப்பான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று இரவு நடைபெறும் விருந்தில் தென்னிந்திய உணவுகளே முக்கிய இடம் பிடிக்கும் என்றும், சைவ உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருந்தில் பிரதமர் மோடியுடன் 7 இந்திய பிரதிநிதிகளும், சீன அதிபருடன் 7 சீனப் பிரதிநிதிகளும் உட்பட 16 பேர் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.
இவ்விருந்தில் நீங்களோ, நானோ நினைப்பது போல உயர்தர சைனீஸ் உணவுகள் இடம்பெறப் போவது இல்லையாம். முழுக்க முழுக்க தென்னிந்திய உணவுகள்தான் அதிகம் இடம்பெறப் போகிறதாம்.
அதாவது, இட்லி, தயிர் சாதம், வடை, பூரி - உருளைக் கிழங்கு மற்றும் மசால் தோசை ஆகியவைதான் சீன அதிபருக்கான விருந்தில் முதலிடம் வகிக்கப் போகின்றன.
அதே சமயம் சைவ உணவுகளே அதிகம் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment
Please Comment