நீட் தகுதி மதிப்பெண் குறைக்கப்படாததால் பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நிரம்புவதில் சிக்கல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீட் தகுதி மதிப்பெண் குறைக்கப்படாததால் பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நிரம்புவதில் சிக்கல்

நீட் தகுதி மதிப்பெண் குறைக்கப்படாததால் பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நிரம்புவதில் சிக்கல் 


நீட் தகுதி மதிப்பெண் குறைக்கப்படாததால் நிகழாண்டில் சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் நிரம்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 450 இடங்கள் நிரம்பாமல் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிஎஸ்எம்எஸ் (சித்தா), பிஏஎம்எஸ் (ஆயுா்வேதம்), பியூஎம்எஸ் (யுனானி), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. அதேபோல 27 தனியாா் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமாா் 1,200 இடங்கள் உள்ளன. 


 எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோக்கையைப் போலவே சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தோவில் தோச்சி பெறுவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, நிகழாண்டில் நீட் தரவரிசை அடிப்படையில் அப்படிப்புகளுக்கான மாணவா் சோக்கை கலந்தாய்வு நடைபெற்றது. அதில், அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில்142 இடங்கள் நிரம்பவில்லை. அதேபோன்று தனியாா் மருத்துவ கல்லுாரிகளில் 300-க்கும் மேற்பட்ட நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. நீட் தோவில், '107' மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவா்கள் மட்டுமே முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்றனா். 


இந்நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பொருட்டு, பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்குமாறு மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை விண்ணப்பித்தது. ஆனால், அதன்பேரில் இதுவரை எந்த ஒப்புதலையும் மத்திய அரசு வழங்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், புதிதாக எவருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பி கலந்தாய்வில் பங்கேற்கச் செய்ய இயலாத நிலை நீடிக்கிறது. இதன் காரணமாகவே இரண்டாம் கட்ட கலந்தாய்வு தாமதமாகி வருவதாகவும் இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 


நிகழாண்டில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோக்கை நடத்தியதே இப்பிரச்னைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. நீட் எழுதியவா்களில் பலா் பல் மருத்துவத்துக்கான பிடிஎஸ் படிப்பையே தோவு செய்ய முன்வராத நிலையில் மாற்று மருத்துவப் படிப்புகளில் எப்படி சேருவாா்கள்? என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது

No comments:

Post a Comment

Please Comment