தேங்காய் சாதம்
உடல் எடையை கூட்டும் தேங்காய் சாதம்
தேவையான பொருள்கள்:
அரிசி 1/2 ஆழாக்கு
தேங்காய் 1 சிறிய மூடி
முந்திரிப் பருப்பு 6 (சிறியதாக கிள்ளி வைத்துக் கொள்ளவும்)
கடுகு 1/2 ஸ்பூன்
பெருங்காயம் 1 சிட்டிகை
கடலைப் பருப்பு 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 3 மீடியம் சைஸ் (காரம் அதிகம் தேவைப்படுபவர்கள் 4 அல்லது 5 கூட போட்டுக் கொள்ளலாம்)
உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்
செய்முறை:
சாதத்தை அதிகம் தண்ணீர் ஊற்றாமல் உதிரியாக வடித்துக் கொள்ளவும் (அரை ஆழாக்கு அரிசி என்றால் ஒரு ஆழாtkக்கு தண்ணீர் ஊற்றவும்).
பிறகு சாதத்தை ஒரு தாம்பாளத்தில் ஆற வைத்துக் கொண்டு, கடுகு, 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கிள்ளியt முந்திரிப் பருப்பு இவற்றை எல்லாம் சிறிது நெய்யில் வறுத்து சாதத்தின் மீது பக்குவமாகக் கொட்டவும்.
மறுபுறம் மீதி உள்ள உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் இவற்றைச் சிறிது எண்ணெய்யில் தீய விடாமல் வறுத்து, சாதத்தின் மீது போடவும். தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்.
அத்துடன் தேங்காய்த் துருவலை, வாணலியில் சிறிது நெய் ஊற்றிச் சிவப்பாக வறுத்து அதையும் சாதத்தின் மீது கொட்டி கருவேப்பில்லையையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இப்போது சுவையான தேங்காய் சாதம் ரெடி. கலக்கும் போதும் இரண்டு ஸ்பூன் உருக்கிய நெய்யை விட்டுtkக் கலக்கினால் சுவை கூடும்.
பின்குறிப்பு : இது இருவருக்கான அளவு மட்டுமே.
தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. அதனால் தேங்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

No comments:
Post a Comment
Please Comment