கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்ய வேண்டியது என்ன?.! சிறு முயற்சி., பெரிய ஆரோக்கியம்..!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்ய வேண்டியது என்ன?.! சிறு முயற்சி., பெரிய ஆரோக்கியம்..!!

கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்ய வேண்டியது என்ன?.! சிறு முயற்சி., பெரிய ஆரோக்கியம்..!!






பெண்ணானவள் வீட்டில் கர்ப்பிணியாக இருந்தால் அவரை அந்த குடும்பமே ஒவ்வொரு அசைவிலும் கவனித்து அவரையும் அவர்களின் எதிர்கால சந்ததியின் உயிரையும் பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு தேவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான பொருட்களை வழங்கி வருவார்கள். அந்த வகையில்., கர்ப்ப காலத்தில் செய்ய கூடிய விஷயத்தை பற்றி காண்போம். அடர்ந்த நிறத்தினால் ஆன உடைகளை தவிர்த்து விட்டு அதற்கு மாற்றாக உள்ள ஆடைகளை அணிவது நல்லது. 




குளிக்கும் போது பயன்படுத்தப்படும் சோப்புகளை தவிர்த்துவிட்டு குளியல் சூரணம் மற்றும் நீராட்டு சூரணம் ஆகியவற்றை உபயோகம் செய்யலாம். இதன் மூலமாக பிறப்புறுப்பு மற்றும் மார்பக பகுதிகளில் கிருமிகள் உண்டாவதை எளிதில் தடுக்கலாம். தினமும் சாப்பிடும் உணவில் சீரகம்., இஞ்சி., சோம்பு மற்றும் ஏலக்காய் போன்ற பொருட்கள் கலந்து கொள்வது உடலுக்கு நல்லது. கர்ப்பத்தின் ஆரம்ப காலம் முதல் ஆறு மாதங்கள் வரை பால் மற்றும் வெண்ணை பொருட்களை சேர்த்து கொள்வதும்., 




உயரம் குறைவான மெத்தையில் படுத்தும் உறங்கலாம். குங்கும பூவை இதமான சூட்டில் வறுத்து பாலில் சேர்த்து குடித்தால் குழந்தைக்கும்., தாய்க்கும் இரும்பு சத்தானது கிடைக்கும். ஆல்பகோடா., உலர்திராட்சை., மாதுளை மற்றும் எலுமிச்சை ஆயிவற்றை அவ்வப்போது சாப்பிடுவதன் மூலமாக மசக்கையை தவிர்க்க இயலும். இறுக்கமான ஆடைகளை தவிர்த்துவிட்டு., தளர்வான ஆடைகளை அணிவது நல்லது. தினமும் கண்டிப்பாக சுமார் 10 மணி நேரம் உறங்கியிருக்க வேண்டும்.




மருத்துவரின் முறையான ஆலோசனை படி மாதத்திற்கு ஒரு முறை என்று ஆறாவது மாதம் வரை தாம்பத்தியம் கூடலாம். வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிப்பது மற்றும் இளஞ்சூடான நீரில் தினமும் குளிப்பது மற்றும் ஈரத்தை நன்றாக துவட்டுவது நல்லது. கருவில் இருக்கும் குழந்தைகள் வளரும் நேரத்தில் மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க போதிய அளவு தண்ணீர் மற்றும் கீரை வகைகள்., காய்கறிகள்., விதைகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து தவிர்க்க இயலும். 




சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று ஏற்படும் பட்சத்தில் சிறுநீரை பெருக்க கூடிய வகையில் இருக்கும் சுரைக்காய்., பூசணிக்காய்., புடலங்காய்., வெண்டைக்காய்., காசினிக்கீரை மற்றும் வெந்தய கீரை வகைகளை உணவில் அதிகளவு சேர்க்க வேண்டும். எளிமையான வீடு வேலைகள் மற்றும் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். மனதிற்கு இதமான பாடல்களை கேட்கலாம்.

No comments:

Post a Comment

Please Comment