உருவானது !புதிய புயல் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உருவானது !புதிய புயல் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம்

உருவானது !புதிய புயல் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம்




தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை துறையின் தென்மண்டல தலைவர் திரு.பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 




மணப்பாறை பகுதியைப் பொறுத்தவரை மிதமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அந்த இடத்தில் வானிலை கண்காணிக்கப்பட்டு மீட்பு குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாக கூறிய திரு.பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் தென் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக தெரிவித்தார். 




இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை மற்றும் டெல்லா மாவட்டங்களிலும், வடதமிழகத்தை பொறுத்தவரை திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக திரு.பாலச்சந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment