`எங்க வயல்ல நடவு நட்டதுக்கு நன்றி!' - சகமாணவியை நெகிழவைத்த அரசுப்பள்ளி மாணவர்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

`எங்க வயல்ல நடவு நட்டதுக்கு நன்றி!' - சகமாணவியை நெகிழவைத்த அரசுப்பள்ளி மாணவர்கள்

`எங்க வயல்ல நடவு நட்டதுக்கு நன்றி!' - சகமாணவியை நெகிழவைத்த அரசுப்பள்ளி மாணவர்கள் 


விவசாயத்தின் அருமையை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அரசுப் பள்ளி மாணவர்கள் 40 பேரை அழைத்துப் போய், சக மாணவியின் வயலில் நடவுநட வைத்த ஆசிரியர்களின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிகிறது. நடவு நடும் மாணவர்கள் கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் உள்ள பொய்யாமணியில் இயங்கி வருகிறது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளியில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 

பள்ளியில் இயற்கை தோட்டம் தொடங்கி வைஃபை வசதி வரை தனியார் பள்ளிகளை தாண்டிய வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மாணவர்களுக்கு கணினி வழி கல்வி கற்றல், திறன்களை மேம்படுத்துதல் என்று இந்த அரசுப் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி, மற்ற துறைகளிலும் ஆர்வம்கொள்ள வேண்டும் என்பதற்காக மாணவர்களை இங்குள்ள ஆசிரியர்கள் மாதந்தோறும் ஒரு களப்பணிக்கு அழைத்துச் செல்கிறார்கள். 


அந்த வகையில், 40 மாணவர்களை, இந்த பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி அனுவின் தந்தை செல்வம் விவசாயம் செய்யும் வயலுக்கு அழைத்துப்போனார்கள். செல்வம், அனு மாணவர்களை இந்த பள்ளியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் பூபதி, ஆசிரியைகள் தமிழ்பூங்குயில்மொழி மற்றும் கவிதா ஆகியோர் அழைத்துபோனார்கள். தங்கள் வயலுக்கு வருகைதந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை செல்வமும், அவரது மகள் அனுவும் கைகூப்பி வரவேற்றனர். அதன்பிறகு, அங்கு வயலில் நடவு நட்டுக்கொண்டிருந்த பெண்களோடு சேர்ந்து, ஆசிரியர்களும், மாணவர்களும் களத்தில் இறங்கி நடவுநட்டனர். 5 வரிசைகளை நட்டு முடித்தனர். அதன்பிறகு, மாணவர்கள் பிராஜெக்டாக செய்த சோளக்காட்டுப்பொம்மையை அனுவிடம் கொடுத்து, அவரது தந்தைக்கு பரிசாக வழங்க வைத்தனர். மாணவர்களை இப்படி வித்தியாசமாக விவசாயம் சம்பந்தப்பட்ட களப்பணிக்கு அழைத்துச் சென்றவர்களில் ஒருவரான ஆசிரியர் பூபதியிடம் பேசினோம். 


 ``மாணவர்களை ஒவ்வொருமாதமும் ஒவ்வொரு களப்பணிக்கு அழைத்துச்செல்வது வழக்கம். ஏற்கனவே, கடந்த நான்கு மாதங்களாக இனுங்கூர் வனமீட்பு பூங்கா, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, கரூர் மாவட்ட ஆட்சியரின் அறை, மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெறும் சுதந்திரதின விழாவை பார்க்கும் நிகழ்வு'னு மாணவர்களை நான்கு களப்பயணம் அழைத்துப்போனோம். 


இப்போ, விவசாயத்தின் மேன்மையை மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காக, அவர்களை செல்வம் வயலுக்கு நடவுநட அழைத்துப்போனோம். இப்போது உள்ள இளம்தலைமுறையினர் விவசாயத்தின்மீது நாட்டம் இல்லாம இருக்காங்க. செல்வத்துக்கு சோளக்காட்டுபொம்மையை பரிசளித்த மாணவர்கள் 'உழவன் சேத்துல காலை வச்சாதான், நாம சோத்துல கைவைக்க முடியும்'னு சும்மா பேசுறோமேயொழிய, விவசாயத்தை பெருசா யாரும் மதிக்கறதில்லை. அதனாலதான், எங்க பள்ளி மாணவர்களுக்கு விவசாயத்தின் அருமையை தெரியவைப்பதற்காக, வயலுக்கு அழைத்துப்போனோம். அனுவின் தந்தை செல்வம் ஏழ்மை நிலையில் உள்ளவர். 


சொந்தமாக நிலம்கூட அவருக்கு இல்லை. 80 சென்ட் நிலத்தை குத்தகைக்கு புடுச்சு, அதுல விவசாயம் பார்த்துட்டு வர்றார். தனது மகளையும் எங்க பள்ளியில் படிக்க வைக்கிறார். அவர் வயலுக்குப் போனதும் செல்வம், அனுவும் நெகிழ்ந்துபோனதோடு, 'எங்க வயல்ல நடவு நட்டதுக்கு நன்றி'னு கண்ணீர்மல்க நன்றி கூறினார்கள். அதைகேட்டு நாங்க பெருமிதமா உணர்ந்தோம்" என்றார்.

No comments:

Post a Comment

Please Comment