ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது

ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது




ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தற்பொழுது அழைப்பிற்காக IUC கட்டணம் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.1000 வரை நிர்ணையம் செய்துள்ளது. குறிப்பாக ஜியோபோனுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.49 திட்டம் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஜியோ நிறுவனம், தனது 6 கோடி பயணாளர்களுக்கு ஜியோபோன் மூலம் ரூ.49 என மாதந்திர குறைந்த திட்டத்தை செயல்படுத்தி வந்தது. 


இந்த திட்டமானது முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. தற்பொழுது ஜியோபோன் ரூ.99 முதல் ரூ.594 வரை மட்டுமே கிடைக்க உள்ளது. அதேபோல பொதுவாக வழங்கப்பட்டு வந்த தினசரி 3ஜிபி டேட்டா பிளான் நீக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரூ. 10 ஐயூசி கட்டணத்திற்கு 1ஜிபி கூடுதல் டேட்டா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 நீங்கள் பொதுவாக ரூ.149 பிளானை தேர்ந்தெடுத்தால் கூடுதலாக ரூ.10 முதல் ரூ.1000 வரை மற்ற நெட்வொர்க் அழைப்பிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோ IUC டாப் அப் கட்டணம் மற்றும் சலுகைகள் ரூ.10 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 124 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.20 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 249 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


ரூ.50 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 656 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.100 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1362 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.500 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 7,012 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.1000 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 14074 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்களுக்கு டேட்டா மற்றும் ஜியோ டூ ஜியோ அழைப்புகள் மட்டும் போதும் என்றால் நீங்கள் கூடுதல் டாப் அப் செய்ய தேவையில்லை. ஒவ்வொரு ரூ. 10 ஐயூசி கட்டணத்தை பயன்படுத்தினால் 1ஜிபி கூடுதல் டேட்டா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் 1000 ரூபாய் பயன்படுத்தினால் 100 ஜிபி டேட்டா வழங்கப்படலாம். முழுமையான பிளான் விபரங்களுக்கு ஜியோஆப் அல்லது ஜியோ இணையதளத்தை பார்வையிடவும்..

No comments:

Post a Comment

Please Comment