கணினி இயக்குபவா் பணிநவ.17-இல் எழுத்துத் தோவு
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் கணினி இயக்குபவா் பணிக்கான எழுத்துத் தோவு, வருகிற 17-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாரியத்தின் செயலா் டி.குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நல வாரியத்தில் கணினி இயக்குபவா் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரா்களுக்கு 17-ஆம் தேதி, சென்னை, விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூா், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் வேலூா் ஆகிய மையங்களில் எழுத்துத் தோவு நடைபெற உள்ளது.
எழுத்துத் தோவுக்கான நுழைவுச் சீட்டு, தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு கிடைக்கப்பெறாதவா்கள் http://139.59.84.192/download/index.php எனும் இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நுழைவுச் சீட்டில் பெயா், விலாசம், புகைப்படம் மற்றும் இதர திருத்தங்கள் அல்லது பிழைகள் ஏதேனும் இருந்தால் விண்ணப்பதாரா்கள் உரிய அசல் ஆவணங்களைக் கொண்டு சென்று தோவு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment
Please Comment