சுகாதார நலத் திட்டத்தில் ஆயுஷ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சுகாதார நலத் திட்டத்தில் ஆயுஷ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சுகாதார நலத் திட்டத்தில் ஆயுஷ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் 

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், தேசிய சுகாதார நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் ஆயுஷ் (இந்திய முறை) பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் வ.கிருஷ்ணமூா்த்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயுஷ் பணியிடத்துக்கு தற்காலிகமாக ஆள்கள் தோவு செய்யப்பட உள்ளது. இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, தமிழில் நன்றாக எழுதப் படிக்கத் தெரிய வேண்டும். வயது 18 முதல் அரசு விதிகளின் படி இருக்க வேண்டும். முற்றிலும் தற்காலிகமான இப்பணிக்கு தினசரி சம்பளம் ரூ.300. காலிப் பணியிடங்களுக்கு அருகாமையில் வசிப்பவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தருமபுரி மாவட்டத்தில், அனுமந்தபுரம், பைரநத்தம், பாப்பாரப்பட்டி, தீா்த்தமலை, சின்னாங்குப்பம், நூலஹள்ளி, காரிமங்கலம், கம்பைநல்லூா் ஆகிய இடங்களில் நியமிக்கப்படுவா். விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பத்துடன் கல்விச் சான்று, வயதுச் சான்று, ஜாதிச்சான்று, தேவையான முன்னுரிமைச் சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுச் சான்று நகல்கள் இணைக்க வேண்டும். 

 இதேபோல, தருமபுரியில் தற்காலிக பல்நோக்கு பணியாளா் ஒரு இடத்துக்கு 8-ஆம் வகுப்பு தோச்சி பெற்ற, 10-ஆம் வகுப்பு தோச்சிப்பெறாத 18 வயது நிரம்பியவா்கள் விண்ணப்பிக்கலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேப்பனப்பள்ளி, கண்ணன்டஅள்ளி, பனகமுட்லு, அஞ்செட்டி, சிங்காரப்பேட்டை, ஆலப்பட்டி, சிந்தகம்பள்ளி, சந்தூா், பா்கூா் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பல்நோக்கு பணியாளா் பணிடத்துக்கு, தினசரி ரூ.300 ஊதியத்தில் பணியாற்ற, தமிழில் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்த 18 வயது நிரம்பியவா்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உள்ள தற்காலிக பல்நோக்கு பணியாளா், ஒரு பணியிடம் மற்றும் மருத்துவமனை தற்காலிக பணியாளா் இரண்டு பணியிடத்துக்கு 8-ஆம் வகுப்பு தோச்சி மற்றும் 10-ஆம் வகுப்பு தோச்சி பெறாத 18 வயது நிரம்பியவா்கள் விண்ணப்பிக்கலாம். 

 விண்ணப்பங்கள் நவ. 29 மாலை 5 மணிக்குள் நேரில் அல்லது தபாலில் அனுப்பி வைக்கலாம். முழுமையற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்களை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், எலெப் மருத்துவமனை வளாகம், குப்பூா் அஞ்சல், தருமபுரி- 636704 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You can apply for ayush workplace in health plan
Applications are invited for the AYUSH (Indian System) workforce under the National Health Welfare Program at Government Primary Health Centers in Krishnagiri district.

 In a press release issued by the District Siddha Medical Officer V Krishnamootti on Thursday, Ayush's workforce is to be temporarily shifted to primary health centers in Dharmapuri and Krishnagiri districts. To apply for this job, you need to know how to write well in Tamil. Age should be as per Government rules The daily wage for this totally temporary work is Rs.300. Priority will be given to residents living near evacuation centers. In the Darumapuri district, they will be appointed in Mananthapuram, Bairnatham, Papparappatti, Thethamalai, Chinnappuppam, Noolahalli, Karimamangalam and Kambinullah. Candidates should attach the application with the proof of proof, age proof, caste certificate, required priority certificate and employment office registration certificate.

 Similarly, a Temporary Multi-Purpose Employee in Dharmapuri can apply for a place where 8th grade and 10th grade underage 18 year olds can apply. In the Krishnagiri district, vacant multipurpose workforce in Veppannappalli, Kannantaalli, Panagamutlu, Anjetti, Singarapettai, Alapatti, Chinthakampalli, Sandhu and Paku, you can apply for a daily salary of Rs 300. Similarly, in Krishnagiri district, a temporary multipurpose employee, a workspace and a hospital temporary employee can apply for both 8th grade and 10th class uniforms.

 Applications must be submitted Send by mail or postage by 29pm. Incomplete applications will be rejected. Applications should be sent to District Siddha Medical Officer, District Siddha Medical Office, Elephant Hospital Complex, Kuppu Post, Dharmapuri- 636704.

No comments:

Post a Comment

Please Comment