ஐஐடி முன்னாள் மாணவர்களிடம் ரூ. 1,000 கோடி நிதி திரட்ட முடிவு
முன்னாள் மாணவர்களிடம் இருந்து ரூ.1,000 கோடி நிதி பெறு வதற்கான முயற்சியில் சென்னை ஐஐடி ஈடுபட்டு வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத் தில் (ஐஐடி) படித்து ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர்.
அவர்களை ஒன்றிணைத்து முன்னாள் மாணவர்கள் சங்கம் (அலுமினி) மூலமாக, சென்னை ஐஐடி நிதி பெற்று வருகின்றது.
இந்நிலையில், முன்னாள் மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, நிறுவனத்துக்கு தேவையான நிதியைப் பெற சென்னை ஐஐடி முயற்சி செய்து வருகிறது.
இதுகுறித்து சென்னை ஐஐடி யின் பேராசிரியர் ஒருவர் கூறும் போது, “சென்னை ஐஐடியில் படித்து உலக முழுவதும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமா னோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் ஐஐடி அலுமினியுடன் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் தொடர்பில் உள்ளனர்.
இந்நிலையில், தாங்கள் படித்த ஐஐடிக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுள்ளோம்.
அதில் 60 சதவீதம் பேர் நிதி அளிப்பார்கள் என்று நம்புகி றோம். முன்னாள் மாணவர்களி டம் இருந்து 2020-ம் ஆண்டுக் குள் ரூ. 1,000 கோடி நிதி பெற இலக்கு நிர்ணயம் செய்துள் ளோம்” என்றார்.
நடப்பு ஆண்டில் ஆயிரத்துக் கும் அதிகமான கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி பணிகளை மேற் கொண்ட சென்னை ஐஐடிக்கு, அரசு, தனியார் அமைப்புகளிடம் இருந்து ரூ.682 கோடி நிதி கிடைத் துள்ளது குறிப்பிடத்தக்கது.
IIT alumni are paid Rs. 1,000 crore to raise funds
Chennai IIT is trying to get Rs 1,000 crore from alumni. A large number of students are studying abroad at the Indian Institute of Technology (IIT) in Chennai.
Together, they are funded by the Alumni Association of Chennai, IIT Madras. In the meantime, Chennai IIT is trying to bring together all the alumni and get the necessary funds for the company. A professor at IIT Madras said, “There are more than 40 thousand people working in the IITs in Chennai.
About 30 thousand of them are connected with IIT aluminum. In this case, we have asked everyone to donate as much as possible to the IITs they studied. We believe that 60 percent of that will be funded. From the alumni dome, the year 2020 will be Rs. We have set a target of Rs 1,000 crore for funding. ” Chennai-IIT, which has more than a thousand innovations and research projects in the current year, has received Rs 682 crore from government and private organizations.

No comments:
Post a Comment
Please Comment