இரவு 11 முதல் 1 மணி வரை 'நைட் வாக்' - பெண்கள் பாதுகாப்புக்கு கேரளாவின் புதுத் திட்டம்!
இரவு நேரத்தில் தனியாகச் செல்லும் பெண்களிடமோ அல்லது சேர்ந்து செல்லும் பெண்களிடமோ தவறான முறையில் நடக்க முயலும் ஆண்களுக்குப் பாடம் புகட்டும் வகையில், புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது கேரளா.
இரவு நேரங்களில் நடந்துசெல்லும் பெண்களைச் சீண்டுபவர்களைக் கண்டுபிடித்து, உடனே சிறைக்கு அனுப்பும் பெண்களின் 'நைட் வாக்' திட்டத்தை வரும் 29-ம் தேதி முதல் அமல்படுத்துகிறது கேரளா.இரவு 11 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரை 'பெண்களின் நைட் வாக்' என்ற இரவில் நடமாடும் நிகழ்ச்சி நிர்பயா தினமான வரும் 29-ம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்தத் திட்டத்தின்படி நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 100 மையங்களில் இரண்டு மூன்று பெண்கள் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து செல்வார்கள். அவர்களை 200 மீட்டர் தொலைவிலிருந்து 25 பேர் கொண்ட தன்னார்வ தொண்டர்கள் கண்காணிப்பார்கள்.
இந்தக் குழுவில் போலீஸ், குடியிருப்போர் சங்கத்தினர், பெண்கள் முன்னேற்றத்திற்கான 'குடும்பஸ்ரீ' அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருப்பார்கள். இரவில் நடமாடும் பெண்களிடம் யாராவது அத்துமீற முயன்றால், உடனடியாக அவர்களைப் பிடித்து போலீஸில் ஒப்படைப்பார்கள்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு வாரமும் நைட் வாக் நிகழ்ச்சி நடைபெறும் என்று, எந்தப் பகுதியில் நைட் வாக் நிகழ்ச்சி நடக்கிறது என்பது ரகசியமாக வைக்கப்படும். எந்தப் பகுதியில் நைட் வாக் செய்வது என்பதை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம், இரவில் நடந்துசெல்லும் பெண்களைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவுசெய்யும் எண்ணம் உள்ளவர்களுக்கு அச்சம் ஏற்படும். பெண்கள் தைரியமாக நடமாடுவதை உறுதிசெய்ய முடியும் என்கிறார்கள்.
கேரள அமைச்சர் கே.கே.சைலஜாஇந்தத் திட்டத்தில், இரண்டு நோக்கங்கள் உள்ளன.
இரவில், தெருக்களில் நடந்துசெல்லும் பெண்களுக்கு மனதில் ஏற்படும் பயத்தைப் போக்குவது திட்டத்தின் முதல் நோக்கமாகும்.
`பசிக்கு விடை; ஒரு பார்சலில் 2 வேளை சாப்பாடு!' - இந்தியாவுக்கே முன்னுதாரணம் ஆகும் கேரளா
மேலும், நைட் வாக் பெண்களிடம் அத்துமீற முயல்பவர்களின் பெயர் விவரங்கள் பொது மக்கள் அறியும்படி வெளியிடுவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாக உள்ளது. இந்தத் திட்டம் வெற்றிபெற்றால், இரவில் பெண்கள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் நடமாடும் அளவுக்கு நிலைமை மாறும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இந்தத் திட்டம்குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறுகையில், ``பொது இடம் எனக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் இந்த 'நைட் வாக்' திட்டம் தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இரண்டு நோக்கங்கள் உள்ளன.
இரவில், தெருக்களில் நடந்துசெல்லும் பெண்களுக்கு மனதில் ஏற்படும் பயத்தைப் போக்குவது திட்டத்தின் முதல் நோக்கமாகும்.இரவில் பெண்கள் நடந்துசென்றால், அவர்களைத் தொந்தரவு செய்யும் எண்ணத்துடன் சிலர் உள்ளனர்.
அப்படிபட்டவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்து கடும் நடவடிக்கை எடுப்பது இரண்டாவது நோக்கமாகும். இந்த திட்டம் டிசம்பர் 29-ம் தேதி தொடங்கி வாரம்தோறும் 100 பகுதிகளில் செயல்படுத்தப்படும். நானும் நைட் வாக் நிகழ்ச்சியில் கலந்துகொள்வேன்" என்றார்.
'Night Walk' - Kerala's new plan for women's safety from 11am to 1pm Kerala's
'Night Walk', a women's night walk, will be implemented from the 29th of this month. starts. According to the plan, two to three women will walk the streets at night in 100 centers in municipal and corporation areas. They are monitored by 25 volunteers from 200 meters away.
The group will consist of police, tenants and members of the 'Kudumbasree' organization for women's advancement. If anyone tries to break into the night-time women, they will be immediately caught and handed over to the police. Severe action will be taken against those arrested. It is kept secret that the Night Walk is held every week and in which area the Night Walk is held.
They choose which area to walk for the night. By hosting the event, women who walk around at night will have the fear of being sexually harassed. She says women can be assured of being brave. Kerala Minister KK Sailaja has two objectives. The first objective of the transport program is to address the fears of women walking the streets at night.
Goodbye to hunger; 2 meals in one parcel! ' - Kerala is the paradigm for India. The scheme is also aimed at disclosing the names of the people who are trying to outdo women in Night Walk. If the scheme succeeds, the women will be able to move at night without any hassle. Kerala Health Minister KK Sailaja said the project will be launched on a nightly basis.
The project has two objectives. The first objective of the transport program is to address the fears of women walking the streets at night. The second objective is to hand over such victims to the police. The project will begin on December 29 and will be implemented in 100 areas weekly. I will also be attending the Night Walk. ”

No comments:
Post a Comment
Please Comment