*இன்றைய சிந்தனை* *17-12-2019*
--------------------------------- -----------------
*"தீயவற்றில் இருந்து தம்மைத் தாமே தூய்மைப் படுத்திக் கொள்ளாதவரும், புலனடக்கத்தையும், உண்மையையும் புறக்கணித்தவரும் துவராடை (துறவி ஆடை) அணிந்து கொள்ள விழைவாராயின்... துவராடைக்கு அவர் அருகதையற்றவரே ஆவார்.*
*ஆனால் எவரொருவர்... தூய்மையும், நல்லொழுக்க நெறியும், புலனடக்கமும், உண்மையும் பொருளாய் உற்றவரோ அவரே... துவராடை (துறவி ஆடை) அணியத்தக்கவராவார்"*
*- பேராசான் கௌதம புத்தர் -*
_______________________
- பண்டைய இந்தியாவில்... புரட்சியும் எதிர்ப்புரட்சியும் -
----------
- இயல் 14 -
*- புத்தரா, கார்ல் மார்க்ஸா -*
தொடர்ச்சி.....
*ரஷ்யாவில் பொதுவுடைமை சர்வாதிகாரம் மிகச் சிறப்பான சாதனைகள் புரிந்திருப்பதாக பெருமையாகக் கூறப்படுகிறது, இதை மறுக்க முடியாது, அதனால்தான் ரஷ்ய சர்வாதிகாரம் எல்லா பிற்பட்ட நாடுகளுக்கும் நல்லது என்று கூறுகிறேன்.*
*'ஆனால்... இந்த சர்வாதிகாரம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று கூறுவது சரியாகாது. மனிதகுலம் விரும்புவது பொருளாதார நன்மைகள் மட்டுமல்ல, ஆன்மீகப் பண்புகளையும் அது விட்டுவிடாமல் வைத்துக் கொள்ள விரும்புகிறது.*
*"நிரந்தர சர்வாதிகாரம் ஆண்மீகப் பண்புகளில் கருத்து செலுத்தவில்லை, இனியும் செலுத்தும் எண்ணம் இருப்பதாக தோன்றவில்லை. அறிஞர் 'கார்லைல்' அரசியல் பொருளாதாரத்தை பன்றிகளின் தத்துவம் என்று கூறினார்"*
*"கார்லைல் கூறியது தவறுதான் ஏனென்றால்... மனிதனுக்கு பொருளியல் வசதிகள் வேண்டும், அதேபோல்... பொதுவுடைமை தத்துவமும் தவறானதே -"*
*"- ஏனென்றால்... அந்தத் தத்துவத்தின் நோக்கம் மனிதர்களும் பன்றிகளைப் போன்றவர்கள்தான் என்பதைப் போல... அவர்களை கொழுக்க வைப்பதாகவே இருக்கிறது. மனிதன் பொருளியல் வளர்ச்சியும், அதே நேரத்தில் ஆன்மீக வளர்ச்சியும் பெறவேண்டும்.*
*- பாபாசாகேப் Dr B.R.அம்பேத்கர் -*
தொடரும்.....
#K.B.G.Thilagar#
No comments:
Post a Comment
Please Comment