புகைப்பட கலைஞரின் புகைப்படத்தை பாராட்டிய ஆப்பிள் நிறுவனம்
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படத்தை ஆப்பிள் நிறுவனம் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரான உஷா ஹரிஷ்ணன் கென்யாவின் நைரோபி பகுதியில் வசித்து வருகிறார். "wildlife " போட்டோகிராஃபர் ஆக வலம் வரும் , இவர் இதற்காக காட்டுக்குள் சென்று வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து அதனை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.
அவர் இந்த புகைப்படங்கள் எடுப்பதற்காக பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் உஷா ஹரிஷ்ணன் கென்யாவில் இருக்கும் வனப்பகுதியில் நடந்து வரும் ஒரு ஆப்பிரிக்க யானையை, அதன் பின்புறத்தில் உள்ள கிளிமாஞ்சாரோ மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மேகங்களுடன் தன்னுடைய செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பாராட்டி ஆப்பிள் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Apple applauds photographer's photo
Apple has posted a photo taken by a popular photographer from Tamil Nadu. Usha Harishhan, a renowned photographer from Tamil Nadu, lives in Nairobi, Kenya. Coming to be a "wildlife" photographer, he went out into the wild and photographed the wildlife and posted it on his social network.
Usha Harishan pictured an African elephant walking in a forest in Kenya with the Kilimanjaro mountain behind it and the clouds surrounding it. Apple praised the photo and posted it on its Instagram page.

No comments:
Post a Comment
Please Comment