இன்றைய செய்திகள்
17.12.19(செவ்வாய்க்கிழமை)
📕📘2600 உபரி பட்டதாரி ஆசிரியர்களை தொடக்கப்பள்ளிகளில் பணியிறக்கம் செய்ய நடவடிக்கை - மாவட்டவாரியாக பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்
-நாளிதழ் செய்தி 📕📘5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வால் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பாட புத்தகங்களை படிக்க வேண்டிய நிர்பந்தம்; கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே அறிவிக்காததால் குழப்பம் என மெட்ரிக் பள்ளிகள் கருத்து
📕📘நூறு சதவீத தேர்ச்சி இலக்கை தவிர்த்தால், கல்வி தரத்தை மேம்படுத்தலாம் என, கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம், ஆசிரியர்கள் கோரிக்கை
📕📘NMMS தேர்வில் 1.5 லட்சம் பேர் பங்கேற்பு தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து
📕📘கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும் - ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன்
📕📘பள்ளியில் பேனாவுக்காக நடந்த சண்டை கொலையில் முடிந்தது: 8ம் வகுப்பு மாணவியை இரும்பு தடியால் 19 முறை அடித்து கொன்ற 10 வயது சிறுமி: ராஜஸ்தானில் பயங்கரம்
📕📘குடியுரிமை திருத்த சட்டத்தில் காங்கிரஸ் தேவையற்ற பிரச்னைகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு. தேவைப்பட்டால் குடியுரிமை திருத்த சட்டத்திருத்தத்தில் மீண்டும் திருத்தம் செய்யப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி
📕📘ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க இம்மாதம் 31ம் தேதிதான் கடைசி நாளாகும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
📕📘ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 20 ஆம் தேதி முதல் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
📕📘தமிழக அரசில் காலியாக உள்ள 40 சதவீத காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, வரும் 8 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
📕📘குடியுரிமைத் திருத்தச்சட்டத்தின் அடிப்படையே பாரபட்சமானது, அந்த சட்டம் இயற்றப்பட்டது கவலையளிக்கும் விதமாக இருக்கிறது என்று அமெரிக்காவும், ஐ.நா.மனித உரிமைக் குழுவும் கவலை தெரிவித்துள்ளன
📕📘வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
📕📘பதவிநீக்க தீர்மானம் நியாயமானது அல்ல: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து
📕📘பொதுத் தோவுக்கான பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 புத்தகங்களை மட்டும் திருத்தம் செய்யவும், சில பாடங்களை நீக்கவும் சோக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தம் மேற்கொள்ள ஆசிரியா் குழுவை பள்ளிக் கல்வித் துறை அமைத்துள்ளது.
📕📘வேலூர் மாவட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் ஆகியோர் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளை 18.12 .2019 அன்று ஆய்வு செய்யவுள்ளதால் , அது சமயம் பள்ளி செயல்பாடுகள் சார்ந்த விவரங்கள் , மாணவர் இடைநிற்றல் விவரங்கள் , பள்ளி வளாக துய்மை , பாதுகாப்பு பராமரிப்பு விவரங்கள் , பிளாஸ்டிக் இல்லா பள்ளி வளாகம் ஆகியவை சார்பாக பள்ளிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை தலைமையாசிரியர் ஆய்விற்கு தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என வட்டாரக்கல்வி அலுவலர்கள் சார்ந்த பள்ளிகளுக்கு அறிவுறுத்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
📕📘தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் அஞ்சல் வாக்குசீட்டு முறையில் வாக்களிப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் தெளிவுரை வழங்கியுள்ளது.
📕📘தலைமை ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், வினாத்தாள்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது..
📕📘தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டத்தில் நடைபெற்ற, உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சியில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு P3 பணி வழங்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.
📕📘12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்விற்கு தயார்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் தயாரித்த வினாத்தாள்களுக்கு தேர்வு எழுதுவது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
📕📘மாற்றியமைக்கப்பட்ட துறை தேர்வு தேதிகள் :
டிச . 22ம் தேதி முதல் , 30 வரை நடக்கவிருந்த துறை தேர்வுகள் , உள்ளாட்சி தேர்தல் காரண மாக , ஜன . , 5 முதல் , 12 வரை நடக்கும் . டில்லி உட்பட , 33 மையங்களில் தேர்வு நடக்கும் தேர்வர்களின் ஹால் டிக்கெட்டை , டிச . , 27 முதல் , ஜன . , 12க்குள் தேர்வாணையத்தின் , www.tnpsc .gov . inல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் . இத்தகவலை TNPSC தெரிவித்து உள்ளது .
📕📘பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க கெடு, இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பான் - ஆதார் இணைப்பு கட்டாயம் என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியது. எனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், தங்களது பான் எண்ணை ஆதாருடன் கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும்.
📕📘விருதுநகர் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதோருக்கு எழுத்தறிவித்தல் திட்டப் பணியை செயல்படுத்திடும் பொருட்டு அனைத்து பள்ளிகளிலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனியாக புதிய சேமிப்பு வங்கிக் கணக்கு எண் துவங்கப்படவும் , அக்கணக்கை பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அப்பள்ளிக்குரிய ஆசிரியர் பயிற்றுநர் இணைந்த கணக்காக ( Joint Account ) பராமரிக்கவும் விருதுநகர் CEO அறிவுறுத்தல்.
📕📘ஆந்திரத்தில் அனைத்து பள்ளிகளையும் ஆங்கில வழி கல்விக்கு மாற்ற மசோதா: சட்டப் பேரவையில் தாக்கலாகிறது
📕📘ஜிஎஸ்டி இழப்பீடாக மாநில அரசுகளுக்கு 35,298 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ள நிலையில், ஜிஎஸ்டி வருவாயை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
📕📘மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாட்களுக்குள் வெளியிட உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
📕📘ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது.
📕📘தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📕📘சென்னை மெரினா கடற்கரையில், 27 கோடி ரூபாய் செலவில், 900 வண்டிக்கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
📕📘குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் வன்முறைப் போராட்டங்கள் துரதிர்ஷ்டமானவை என்றும் அவை தமக்கு மிகவும் கவலை அளிப்பதாகவும் பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.*
📕📘நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மந்தம் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்து பிரதமர் மோடி முழு அமைச்சரவைக் கூட்டத்தில் விரைவில் விவாதிக்க உள்ளார்.
📕📘நாட்டில், பொதுமக்களிடம் வீட்டு உபயோக பொருட்கள், மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை வாங்கும் திறன் குறைந்துவிட்டதே, இந்திய பொருளாதார தடுமாற்றத்திற்கான, காரணிகளில் மிக முக்கியமானதாகும் என மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் கூறியிருக்கிறது.
📕📘📕📘📕📘📕📘📕📘
🌹PINDICS ENTRY STEPS🌹
👉1.2018_19 கல்வியாண்டு விடுமுறை(cl.,ml, training days,od,) கையில் வைத்து கொண்டால் இணையத்தில் நேரடியாக மிக எளிதாக நிரப்பி விடலாம்.
👉2.ஆசிரியர்கள் புதிய Username, Password பயன்படுத்தி emis website ல் open செய்ய வேண்டும்.
👉3. Teacher Profile Open ஆன உடன் கீழே Bardiagram option (icon) ஐ கிளிக் செய்யவேண்டும்.
👉4. அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டும்.
👉5. தொடக்க, நடுநிலை பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் Pindics கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.
👉6. உயர்/மேல்நிலை பள்ளிகளில் 6,7,8 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.
👉7. அனைத்தையும் பதிவு செய்த உடன் SAVE, SUBMIT என இரண்டு option வரும். முதலில் SAVE கொடுக்க வேண்டும், பின்னர் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துவிட்டு SUBMIT கொடுக்க வேண்டும். SUBMIT கொடுத்த பின்பு எதையும் மாற்ற இயலாது.
👉8.SUBMIT கொடுத்த பின்பு தலைமை ஆசிரியர்கள் பள்ளி EMIS வலைதளத்தில் School Username & Password பயன்படுத்தி உள்சென்று அனைத்து ஆசிரியர்களுக்கும் HM evaluation முடித்திருக்க வேண்டும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:
Post a Comment
Please Comment