அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு சன் டி.வி. 1.82 கோடி நிதி உதவி
சென்னை : அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் கல்வித் திறன் மேம்பாட்டுக்காக சன் டி.வி. ரூ.1.82 கோடி நிதி உதவி அளித்துள்ளது. கல்வி நிலையங்களில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குதல், மாணவர்களுக்கான கற்றல் சூழலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக சன் டி.வி. தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 50 அரசுப் பள்ளிகளில் 350 ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்ட சன் டி.வி. ஒரு கோடியே 82 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
இதற்கான காசோலையை, சேவ் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சாவ்லா, நிர்வாகி திவ்யா பட் ஆகியோரிடம் சன் டி.வி.
சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார். சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக சன் டி.வி. கடந்த 5 மாதங்களில் மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sun TV to improve public school students' skills 1.82 crore in financial assistance
Chennai: Sun TV to promote educational skills of children attending public schools. Rs.1.82 crore has been provided for financial assistance. Sun TV has been involved in various community development initiatives, including building infrastructure in educational institutions and improving the learning environment for students.
Continuing financial assistance. As part of this, SunTV will build 350 smart classrooms in 50 government schools in Tiruvallur district. One crore 82 lakhs 29 thousand rupees have been given financial assistance.
Vishal Chawla, Chief Executive Officer of Save the Children NGO, and Divya Bhatt, Executive Manager, Sun TV Kaveri was presented by Dr. Maran. Sun TV for social development work In the last five months alone, more than Rs.25 crores

No comments:
Post a Comment
Please Comment