கோள்கள் இணைவதால் பூமியில் எந்தவித மாற்றமும் ஏற்படாது - சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் அறிவிப்பு !! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கோள்கள் இணைவதால் பூமியில் எந்தவித மாற்றமும் ஏற்படாது - சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் அறிவிப்பு !!

கோள்கள் இணைவதால் பூமியில் எந்தவித மாற்றமும் ஏற்படாது - சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் அறிவிப்பு !!



நாளை, 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய 3 நாட்கள் கோள்சாரா அமைப்பு நடைபெறவுள்ளது. ந்த அமைப்பு நெருப்புக்கும், காற்றுக்குமான மிகப்பெரும் போராட்டமான அமைப்பாக வரும் கோள்சாரா கிரக சேர்க்கையாகும். இதுகுறித்து சென்னை பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் சவுந்தரராஜன் கூறுகையில், ” கோள்கள், சூரியனை தங்கள் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. கெப்ளரின் 3-வது விதிப்படி சூரியன் மற்றும் கோள்கள் இருக்கும் தொலைவை பொறுத்து அது சூரியனை சுற்றிவரும் காலம் மாறுபடும். 

சில நேரங்களில் ஒரு கோள் மற்றொரு கோளை முந்தி செல்வதை போலவும், அருகருகே அமைந்திருப்பது போலவும் தோன்றும். உண்மையில் அவற்றிற்கு இடையே பல கோடி கிலோ மீட்டர் தூரம் விலகி உள்ளன. எனவே இதுபோன்ற கோள்கள் ஒருங்கமைவது அவ்வப்போது நிகழும். இது பூமியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இது ஒருங்கிணைந்த ஈர்ப்பு விசை நம்மை எந்த வகையிலும் பாதிக்காது. 

நிலவும், சூரியனும் ஒருங்கே அமைந்து இருப்பதால் ஒவ்வொரு மாதமும் அமாவாசையில் நிகழ்வது போல கடல் அலை எழுச்சி ஏற்படும். இது மிக அதிகமாகவோ அல்லது அழிவை உண்டாக்கும் வகையில் இருக்காது. ஆனால் வழக்கமான அமாவாசை காலங்களில் இருப்பது போல கடல் அலை எழுச்சி இருக்கும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது ” என்று தெரிவித்துள்ளார்.



"The planets orbit the sun in their orbit," said Soundararajan, director of the Birla Planetarium


Planetary merger will not change the Earth. The planetary system is the planetary planet, which is the largest struggle for fire and air. "The planets orbit the sun in their orbit," said Soundararajan, director of the Birla Planetarium, Chennai. According to Kepler's Rule 3, the period of the orbit of the sun varies depending on the distance to the sun and the planets. 

Sometimes a planet appears as if it were overtaking another planet, and it is located nearby. In fact, there are many billions of kilometers away between them. So it is very likely that such planets will coincide. It will make no changes on earth. It does not affect us in any way. 

Because the sun and the moon are together, the sea wave will rise every month. It will not be too much or do anything destructive. But as in the normal new moon period, there will be a sea wave surge. The public will not be affected. ”

No comments:

Post a Comment

Please Comment