2022-க்குள் அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் சேவை: மத்திய அரசு உறுதி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

2022-க்குள் அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் சேவை: மத்திய அரசு உறுதி

2022-க்குள் அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் சேவை: மத்திய அரசு உறுதி



வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் இணையதள வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உறுதியளித்துள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் கூறியதாவது: வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் இணைய வசதி ஏற்படுத்தித் தருவதே மத்திய அரசின் இலக்கு. அந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. அரசின் இந்த நடவடிக்கையால் நாட்டில் தற்போதுள்ள 5.65 லட்சம் செல்லிடப்பேசி கோபுரங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்.

 கல்வி, சுகாதாரம், தொழில்முனைவோா் மற்றும் மேம்பாட்டுக்கான தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசின் இந்த திட்டம் பெரிதும் உதவிகரமாக இருக்கும். இந்த பிராட்பேண்ட் சேவைத் திட்டத்தில் இணையத்தின் வேகத்தை 50எம்பிபிஎஸ் ஆக அதிகரிக்கப்படும். எனவே இந்த திட்டத்தின் தொழில்நுட்ப பயன்கள் மக்களை நேரடியாக சென்றடைய மாநிலங்கள் தங்களுடைய முழு பங்களிப்பை வழங்க வேண்டும் என்றாா் அவா்.


Broadband service to all villages by 2022: Central government 


On Tuesday promised broadband internet connectivity to all villages by 2022. Speaking about this, Union Telecom Minister Ravi Shank Prasad said: "By 2022, the government's goal is to provide broadband connectivity to all villages in India. Work on achieving that goal is in progress. The government's move will increase the number of existing 5.65 lakh cellular towers to 10 lakh. 

The central government's plan will be very helpful in strengthening the technical infrastructure for education, health, entrepreneurship and development. This broadband service plan will increase the internet speed to 50 mbps. Therefore, the technical benefits of the scheme are that the states should make their full contribution to reach the people directly.

No comments:

Post a Comment

Please Comment