23 மணி நேரத்தில் 138 பாக்குத்தட்டுகளில் பாரதியார் ஓவியம்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

23 மணி நேரத்தில் 138 பாக்குத்தட்டுகளில் பாரதியார் ஓவியம்!

23 மணி நேரத்தில் 138 பாக்குத்தட்டுகளில் பாரதியார் ஓவியம்!



எட்டயபுரத்தில் தினமணி சார்பில் நடைபெற்ற மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, பாக்குத்தட்டில் வரைந்த பாரதியார் ஓவியத்தை பரிசளித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த "புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பள்ளி'யின் 8-ஆம் வகுப்பு மாணவியான சம்ஹிதா. பாரதியாரின் 138-ஆவது பிறந்த நாளையொட்டி 138 பாக்குத்தட்டுகளில் அவருடைய படத்தை வரைந்து சாதனை படைத்ததன் மூலம் ஆளுநரை சந்தித்து பாராட்டு பெறும் வாய்ப்பு சம்ஹிதாவுக்கு கிட்டியது. 

ஆளுநருக்கு பாரதியின் படத்தை பரிசளித்து பாராட்டு பெற்றது குறித்து மாணவி சம்ஹிதா கூறியது: "யூகேஜி படிக்கும்போதே நான் கார்ட்டூன் ஓவியங்கள் வரைவதைப் பார்த்த எனது பெற்றோர், சிவராம் கலைக்கூட ஓவிய ஆசிரியர் கணேசனிடம் முறைப்படி ஓவியம் கற்க அனுப்பினர். அவர் அளித்த பயிற்சி காரணமாக, தற்போது ஆயில் பெயின்டிங், 3டி ஓவியங்கள் வரையும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளேன். 4-ஆம் வகுப்பு படிக்கும்போது குழந்தைகள் தின விழாவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் அப்போதைய மாநகர காவல் ஆணையரிடம் பாராட்டு பெற்றேன். 6-ஆம் வகுப்பு படிக்கும்போது உலக அளவில் நடைபெற்ற பிகாசோ ஓவியக் கண்காட்சியில் கோல்டன் பிரிவில் என்னுடைய ஓவியம் தேர்வு செய்யப்பட்டது. 

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகளில் ஏராளமான பரிசுகளை பெற்றுள்ளேன். சிறு வயதிலிருந்தே பாரதியாரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டேன். பெண் விடுதலைக்காக பாரதியார் பாடிய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே, அவரது பிறந்தநாளில் ஏதாவது செய்யவேண்டும் என எண்ணினேன். அவ்வாறு உருவானது தான் இந்த 138 பாக்குத்தட்டுகளில் வரைந்த ஓவியம். இவற்றை வரைய 23 மணி நேரம் ஆனது. ஆளுநரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. அதுவும் எனக்குப் பிடித்த பாரதியாரின் ஓவியத்தை ஆளுநரிடம் அளித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. 

இப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தினமணிக்கு எனது நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும் என்ற உத்வேகத்தை தினமணியின் பாரதி விழா எனக்கு தந்திருக்கிறது'' என்றார். சம்ஹிதா குறித்து அவருடைய தாயார் மீனாட்சிசுந்தரி கூறியது: "எங்கள் மகள் ஆளுநரின் பாராட்டைப் பெற்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சம்ஹிதா ஓவியம் மட்டுமின்றி, கர்நாடக சங்கீதமும் கற்று வருகிறார். யோகாவிலும் ஈடுபாடு உள்ளது. படிப்பிலும் மாநில அளவில் சிறந்த மாணவியாக உள்ளார். மருத்துவராக வேண்டும் என்பதே அவளுடைய கனவு'' என்றார். 


23 hours 138 pakkuttattukal Bharatiya painting! 

Ettayapurat the PTS, on behalf of the poet Bharathi award ceremony which was attended by Governor panvaril by Lt Col Purohit, the pakkuttat the drawings MITS painting gifted everyone's attention palaiyankottaiyaic the "Puspalatha British International palli the 8th-grade student challenge Hita. Bharatiar of the 138-th birth anniversary of 138 pakkuttattukal his image drawing achievement original by the Governor met with the appreciation of the opportunity to receive Samhita campaign. 

Governor Bharti's picture gifted won the praise of the student Samhita said: "yukeji reading I cartoon sketches varaivataip watched my parents, Sivaram studio ova The teacher sent Ganesan formally painting. Because of his training, I have now grown up to oil painting and 3D painting. When I was in grade 4, I was applauded by the then Municipal Police Commissioner for a painting competition held at Children's Day. When I was in 6th grade, my painting was selected in the Golden Section at the Picasso Art Exhibition Worldwide.

 I have received numerous prizes at district level painting competitions. I was inspired by Bharathiyar's songs from an early age. I like the songs sung by Bharatiyar for female liberation. So I thought I should do something for his birthday. The 138 pockets of artwork that sprung up in this way. It took 23 hours to draw these. I never dreamed I would get a chance to meet the governor. It was my pleasure to present the portrait of my favorite Bharatiya to the Governor. 

I wish to express my gratitude to Dinamani for giving me such an opportunity. The Dharamani Bharati Festival has given me the impetus to have many more achievements. ” Commenting on Samhita, her mother Meenakshi Sundari said: "We are delighted that our daughter has received the Governor's praise. Samhita is learning not only in painting but also in Karnataka. She is also involved in yoga.

No comments:

Post a Comment

Please Comment