மின்வாரிய ஒயர் மேன் வேலை: எம்.டெக் படித்தவர்களும் விண்ணப்பம்... சாதித்துக் காட்டிய 2 குழந்தைகளின் தாய்!
தஞ்சையில் மின்வாரிய ஒயர் மேன் வேலைக்கு பி.இ, எம்.டெக் படித்தவர்களும் விண்ணப்பித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இரண்டு குழந்தைகளின் தாய் வெற்றிபெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஒயர் மேன் வேலைக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. ஐந்தாயிரம் பணி இடங்களுக்கு 95 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வில் பங்கேற்க ஐந்தாம் வகுப்பு பாஸ் ஆகியிருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பி.இ, எம்.டெக் பட்டதாரிகள் கூட இந்த பணிக்கு விண்ணப்பித்திருந்தனர்.திருச்சி மண்டலத்திற்குப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு தஞ்சையில் நடந்து வருகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பைத் தொடர்ந்து உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 30 அடி மின் கம்பத்தில் ஏறி இரும்பு குறுக்கு சட்டத்தைபொருத்தும் தேர்வு நடந்தது. இதை 8 நிமிடங்களில் முடிக்க வேண்டும். போட்டியில் பங்கேற்ற அரியலூர் மாவட்டம் வளவட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணரசி (36) ஆறு நிமிடம் 43 விநாடிகளுக்குள் இதை செய்து முடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதேபோல், கிரிப்பர்ஸ் கட்டும் சோதனையை ஒரு நிமிடம் 40 விநாடிகளில் முடித்தார்.
இதற்கு எட்டு நிமிடம் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.இரும்பு சட்டத்தை தூக்கிக்கொண்டு 100 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடத்தில் கடக்க வேண்டும். ஆனால், பெண்ணரசி வெறும் 25 விநாடிகளில் கடந்தார். இதன் மூலம் அவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த உடல் தகுதித் தேர்வில் மொத்தம் 41 பெண்கள் கலந்துகொண்டனர். அவர்களில் பெண்ணரசி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பெண்ணரசி கூறுகையில், "எனக்குத் திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகிறது.
இரண்டு குழந்தைகள் உள்ளனர். என்னுடைய கணவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக உள்ளார். அவருக்கு 42 வயதாகிவிட்டதால், அவரால் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாது. என்றதால்தான் நிரந்தர ஊழியராக முடியவில்லை, நீயாவது இந்த வேலையை பெற வேண்டும் என்று கூறுவார். அவர்தான் எனக்கு பயிற்சியும் அளித்தார். அவர் கொடுத்த ஊக்கத்தால்தான் என்னால் இந்த தேர்வில் வெற்றி பெற முடிந்தது" என்றார்.
பின்னர் இது குறித்து தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சங்கரன் கூறுகையில், " தமிழகம் முழுக்க மொத்தம் 95,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். பெரும்பாலானவர்கள் பி.இ, எம்.டெக், பட்டதாரிகள்தான். தஞ்சை மையத்தில் மொத்தம் 884 பேர் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 41 பெண்கள் பங்கேற்றார்கள். அதில் பெண்ணரசி மட்டுமே தேர்வ செய்யப்பட்டுள்ளார். வேறு சில தேர்வ மையங்களில் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது" என்றார்.
Apprentice Wire Man Job: M.Tech Students Applying ... Mother Of 2 Children
Despite the shock of the PE and M.Tech educators applying for a job as an electrician in Mannar, the success of the mother of two children has attracted everyone's attention. Vacancies for the Wire Man Work have been announced on behalf of the Tamil Nadu Power and Distribution Corporation. 95 thousand people applied for five thousand workplaces. It was announced that there would be a fifth class pass to take the exam.
But even the BE and M.Tech graduates have applied for the job. Fitness examinations are being conducted following certification verification. There was also a choice of a steel cross frame with a 30-foot rope. This should be completed in 8 minutes. Pennarasi (36) from Valavattikuppam village in Ariyalur district, who did the competition, did this in six minutes and 43 seconds and caught the attention of everyone.
Likewise, the Grippers finished the building test in one minute and 40 seconds. It was given eight minutes to lift the iron frame and cross the 100 meters in one minute. But, the woman passed in just 25 seconds. By this he has passed first class. A total of 41 women participated in this fitness test. Of them only the woman has been chosen. The woman said, "I am married for 16 years.
I have two children. My husband is a contract worker in electricity. He cannot apply for this job because he is 42 years old. He gave I was able to win this exam because of the motivation. 41 women participated in it Only women have been selected. In some other selection centers, women have been selected. A total of 10 have been selected. ”

No comments:
Post a Comment
Please Comment