தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
குமரிக் கடல் மற்றும் தென் தமிழக பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது வலுவிழந்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை வாய்ப்பு குறைந்துள்ளது. அடுத்த 2 நாட் களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் திருப்பூண்டியில் 6 செ.மீ., திருவாரூர், குடவாசல், நன்னிலம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 26-ம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம், புதுச்சேரியில் சராசரியாக 45 செ.மீ. மழை பெய்துள்ளது.
இந்த காலகட்டத்தில் வழக்கமாக 44 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு ஒரு செ.மீ. மழை அதிகமாக பெய்துள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறி னர்.
Thundershowers in Tamil Nadu, Puducherry for 2 days
Thunderstorms are likely to occur in Tamil Nadu and Puducherry for the next two days. Chennai Meteorological Department officials said: The atmospheric overlapping circulation in the Kumarik Sea and the southern Tamil Nadu region is currently weakening. Due to this, rainfall in Tamil Nadu and Puducherry has been reduced. The next 2 knots are likely to receive light rains in one place.
The sky is generally cloudy in Chennai. No chance of rain. In the 24 hours that ended at 8.30 am on Thursday, the maximum number of people in Nagai district was 6 cm in Thiruppondi and 3 cm in Thiruvarur, Kudavasal and Nannilam.
Rain has been reported. From October 1 to December 26, Tamil Nadu recorded an average of 45 cm in Puducherry. It has been raining. This period is usually 44 cm. It is raining. This year it will be one cm. The rain is heavy. According to Chennai Meteorological Department officials.

No comments:
Post a Comment
Please Comment