மாநில அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி ஆசிரியரின் படைப்புக்கு 4ம் இடம்
தர்மபுரி: கரூரில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில், தர்மபுரி மாவட்ட, அரசு பள்ளி ஆசிரியரின் படைப்புக்கு, நான்காம் பரிசு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர், தென்னிந்திய போட்டியில் பங்கேற்ற தகுதி பெற்றார்.பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நவ., 31 முதல், டிச., 2 வரை கரூரில் நடந்தது. இதில், தர்மபுரி மாவட்டம் சார்பில், காரிமங்கலம் யூனியன், கும்பாரஹள்ளி நடுநிலைப்பள்ளி மாணவி வினோதினி, அப்பள்ளி அறிவியல் ஆசிரியர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆசிரியர்களுக்கான படைப்பு பிரிவில், 50க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப் பட்டன. அவற்றில், ஆசிரியர் நாராயணசாமி வரும், 26ல் நடக்க உள்ள 'வளைய சூரிய கிரகணத்தை' கண் பாதிப்பு இல்லாமல் பார்க்க பயன்படும், 'டெலஸ்கோப் பிம்பம் வீழ்த்தி' மற்றும் 'ஆடிப்பந்து' ஆகிய இரண்டு கருவிகளை கண்டுபிடித்து, காட்சிப்படுத்தி இருந்தார்.
இதற்கு, நான்காம் பரிசு கிடைத்தது. இதையடுத்து அவர், அடுத்த மாதம் நடக்க உள்ள தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு, பங்கேற்க தகுதி பெற்றார். ஆசிரியர் நாராணசாமியை, சி.இ.ஓ., முத்துகிருஷ்ணன், தலைமை ஆசிரியை ஈஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்கள் பாராட்டினர்.
4th of the State School Teacher's Creation at the State Science Fair
Dharmapuri: Fourth prize has been awarded for the creation of the Government School Teacher at the State Science Fair in Karur. On behalf of the School Education Department, a statewide science fair was held in Karur from Nov. 31 to Dec. 2. On behalf of Dharmapuri district, Karimmangalam Union, Kumbarahalli Middle School student Vinodini and Appalli science teacher Narayanasamy participated. More than 50 works were exhibited in the creative section for teachers.
Among them, author Narayanasamy had invented and exhibited two instruments, the 'Telescope Imager' and 'Adi Ball', which would be used to observe the 26th solar eclipse of the coming 26th solar eclipse. For this, I got the fourth prize. He then qualified to participate in the South Indian Science Fair next month. Editor Naranasamy, CEO, Muthukrishnan, Head Editor, Ishwari and teachers and science enthusiasts.

No comments:
Post a Comment
Please Comment