5 நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்கும் பசலைக்கீரை டயட்!
உலகளவில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் தான். ஏராளமான மக்கள் அதிக உடல் பருமனால் அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். நீங்களும் அத்தகையவர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.
உடல் எடையைக் குறைக்க அல்லது தொப்பையைக் குறைக்க பல்வேறு டயட்டுகள் உள்ளன. ஒவ்வொரு டயட்டும் ஒவ்வொருவரிடன் உடலைப் பொறுத்து நன்மை அளிக்கும். அனைவருக்குமே அனைத்து டயட்டும் நல்ல பலனைத் தரும் என்று கூற முடியாது.ஒருவரது உடல் எடை எப்படி உணவுகளால் அதிகரிக்கிறதோ, அதே அதிகரித்த உடல் எடையை உணவுகளின் மூலம் குறைக்க முடியும்.
அப்படி உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புதமான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள் தான் பசலைக்கீரை. பசலைக்கீரையை முக்கியமாக கொண்ட டயட்டை ஒருவர் மேற்கொண்டால், ஐந்து நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்கலாம்.
5 நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்கும் பசலைக்கீரை டயட்!
பசலைக்கீரை டயட்
பசலைக்கீரையில் உள்ள உட்பொருட்கள், உடலில் குறிப்பிட்ட செயல்பாடுகளில் சுமைகளை அதிகரிக்கும் என்பதால், பசலைக்கீரையை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. அதிலும் பசலைக்கீரை டயட்டை 5 நாட்களுக்கு மேல் ஒருவர் மேற்கொள்ளக்கூடாது. அதோடு, பசலைக்கீரை டயட்டை வருடத்திற்கு 2 முறை மட்டும் மேற்கொள்ளலாம்.
அதுவும் ஒரு முறைக்கு 5 நாட்கள் இந்த டயட்டை மேற்கொண்டால், 3 கிலோ கொழுப்புக்களை உடலில் இருந்து இழக்கலாம்.5 நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்கும் பசலைக்கீரை டயட்!
ஊட்டச்சத்துக்கள்
100 கிராம் பசலைக்கீரையில் 26 கலோரிகள் உள்ளது. மேலும் இதில் உள்ள பி வைட்டமின்கள் மற்றும் மக்னீசியம் மெட்டபாலிச செயல்பாட்டிற்கு உதவி, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை உருகச் செய்யும்.
அதோடு பசலைக்கீரையில் உள்ள பொட்டாசியம், உடலில் நீரின் அளவைப் பராமரிக்க உதவும். இந்த கனிமச்சத்து எடை குறைந்தாலும், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறையாமல் அழகாக சருமம் இருக்க உதவி புரியும். முக்கியமாக பசலைக்கீரையில் உள்ள நார்ச்சத்து, உடல் எடையைக் குறைக்க உதவி புரியும்.
அதோடு, இதில் அத்தியாவசிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
இப்போது ஐந்து நாள் பசலைக்கீரை டயட்டில், ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பது குறித்துக் காண்போம்.
நாள் 1
காலை உணவு : 1 வேக வைத்த முட்டை, 2 தக்காளி மற்றும் பசலைக்கீரையுடன் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்க்கப்பட்ட சாலட், 2 துண்டு முழு தானிய பிரட்.
மதிய உணவு : க்ரில் சிக்கன், பசலைக்கீரை சூப். இரவு உணவு : பசலைக்கீரையுடன் மற்ற காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட சாலட்.
நாள் 2
காலை உணவு : ஓட்ஸ் உடன் யோகர்ட், இனிப்பில்லாத டீ.
மதிய உணவு : பசலைக்கீரை சூப். இரவு உணவு : பசலைக்கீரை மற்றும் ஆரஞ்சு சூப்.
நாள் 3
காலை உணவு : பசலைக்கீரை ஆம்லெட், 1 துண்டு முழு தானிய பிரட். மதிய உணவு : மீன், பசலைக்கீரை மற்றும் சாதம்.
இரவு உணவு : வேக வைத்த பசலைக்கீரை மற்றும் 2 ஆரஞ்சு பழங்கள்.
நாள் 4
காலை உணவு : பசலைக்கீரை, ஆப்பிள் மற்றும் கேரட் ஜூஸ்.
மதிய உணவு : சிக்கன் அல்லது மீன், பசலைக்கீரை சாலட்.
இரவு உணவு : பசலைக்கீரை மசாலா சாதம்.
நாள் 5
காலை உணவு : 2 வேக வைத்த முட்டை, ஒரு பௌல் யோகர்ட்.
மதிய உணவு : சிக்கன் அல்லது மீன் மற்றும் பசலைக்கீரை.
இரவு உணவு : விருப்பமான பழச்சாறு.குறிப்பு
பசலைக்கீரை டயட்டால் இன்னும் சிறப்பான பலனைப் பெற நினைத்தால், தினமும் சிறிது உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொள்ளுங்கள்.
இதனால் பசலைக்கீரை டயட்டில் முடிவில் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். முக்கியமாக எந்த ஒரு டயட்டை மேற்கொள்ளும் போதும், ஜங்க் உணவுகள், சர்க்கரை உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
Diet of spinach, which weighs 3 kg in 5 days!
The biggest problem worldwide is obesity. Many people are so obese they are unable to do their daily jobs. Are you such? If so, this article is for you. There are many different diets to lose weight or belly. With each diet, each person benefits according to the body.
Not all diets are good for everyone. Just like how one's body weight increases with diet, the same increased body weight can be reduced by diet. Spinach is an amazing and healthy food that helps you lose weight. If one takes a diet consisting of spinach, you can lose 3 kg in five days. Diet of spinach, which weighs 3 kg in 5 days!
Diet The Spinach Diet One should not consume too much green beans because the ingredients in the spinach will increase the burden on specific functions of the body. In addition, one should not take paprika for more than 5 days. In addition, you can take the Dairy Diet twice a year.
If you take this diet for 5 days at a time, you can lose 3 kg of fat from the body. Nutrients 100 grams of spinach has 26 calories. It also contains B vitamins and magnesium which helps to metabolize fat, helping to metabolize fat. In addition, the potassium content in spinach can help maintain body water levels.
Although this mineral is lightweight, it helps to keep the skin looking beautiful without diminishing the flexibility of the skin. Fiber, mainly in spinach, helps in weight loss. In addition, it contains essential omega-3 fatty acids. Now on a five-day spinach diet, let's see what you eat every day.
Day1 breakfast: 1 boiled egg, 2 tomatoes and lentils with lemon juice and a salad with olive oil, 2 slices of whole grain bread. Lunch: Krill Chicken, Spinach Soup. Dinner: Salad prepared with other vegetables with spinach.
Day 2 Breakfast: Yogurt with oats, unsweetened tea. Lunch: Spinach soup. Dinner: Spinach and Orange Soup.
Day 3 Breakfast: Spinach omelette, 1 piece whole grain bread. Lunch: Fish, spinach and cheddar. Dinner: Steamed spinach and 2 orange fruits.
Day 4 Breakfast: Spinach, apple and carrot juice. Lunch: Chicken or fish, spinach salad. Dinner: Passeer Spice Nutmeg.
Day 5 Breakfast: 2 boiled eggs and a bowl of yogurt. Lunch: Chicken or fish and spinach. Dinner: Preferred fruit juice. If you are looking for a more effective diet, take a little exercise every day.
You will see a good change in weight by the end of the diet. When going on a diet, don't forget to avoid junk foods, sugary foods and oil fried foods altogether.


No comments:
Post a Comment
Please Comment