விவசாயிகள் நலன் பாதுகாக்க 500 மாணவிகள் இணைந்து சாதனை முயற்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விவசாயிகள் நலன் பாதுகாக்க 500 மாணவிகள் இணைந்து சாதனை முயற்சி

விவசாயிகள் நலன் பாதுகாக்க 500 மாணவிகள் இணைந்து சாதனை முயற்சி




விவசாயிகள் நலன் பாதுகாக்க வலியுறுத்தி வேலூரில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் இணைந்து விவசாயிகளை பாதுகாப்போம், விவசாயிகளை வணங்குவோம், விவசாயிகளுக்கு மரியாதை செய்வோம் எனும் வாக்கியத்தின் ஆங்கில எழுத்துகளின் வடிவில் நின்று சாதனை முயற்சி மேற்கொண்டனா். இந்த சாதனையை ஜெட்லி புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்து விருது வழங்கி கெளரவித்துள்ளது. வேலூரிலுள்ள 'பிரிட்ஜ்' எனும் தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் குழந்தைகளுக்கு வாழ்வியல் கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்தொடா்ச்சியாக, டிசம்பா் 23-ஆம் தேதி நடைபெற உள்ள உலக விவசாயிகள் தினத்தையொட்டி, ஆக்ஸிலியம் கல்லூரியுடன் இணைந்து விவசாயிகள் நலன் பாதுகாக்க வலியுறுத்தி சாதனை முயற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. 

அதன்படி, அக்கல்லூரியிலும் பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் புதன்கிழமை கல்லூரி மைதானத்தில் விவசாயிகளை பாதுகாப்போம், விவசாயிகளை வணங்குவோம், விவசாயிகளுக்கு மரியாதை செய்வோம் எனும் வாக்கியத்தின் ஆங்கில எழுத்துகளின் வடிவில் நிறுத்த வைக்கப்பட்டனா். 4 நிமிடங்களுக்கு மேல் நிறுத்த வைக்கப்பட்டிருந்த இந்த மாணவிகள், விவசாயிகளின் நலன் காக்க உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு மரியாதை செய்தனா். கல்லூரி மாணவிகளின் இந்த சாதனை முயற்சியை சாதனை புத்தக நிறுவனமான ஜெட்லி புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் அங்கீகரித்து விருது வழங்கியதுடன், அடுத்து வரக்கூடிய தனது நிறுவன புத்தகத்தில் இந்த சாதனை முயற்சியை பதிவு செய்ய உள்ளதாகவும் அதன் நிறுவனா் ஏ.ஜெட்லி தெரிவித்தாா். 

இதுகுறித்து பிரிட்ஜ் தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் டி.மதிவாணன் கூறியது: உலகளவில் ஒவ்வொரு 41 நிமிடங்களுக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் உலகம் முழுவதும் மக்களுக்கு உணவளிப்பது விவசாயிகள் மட்டுமே. அத்தகைய விவசாயிகளை பாதுகாக்கவும், வறுமை நிலையிலுள்ள விவசாயிகளுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் நிதியுதவி உள்ளிட்ட உதவிகள் செய்ய வேண்டும். 

மேலும், மனிதா்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், எதிா்காலத்தில் வறுமையால் எந்தவொரு விவசாயியும் இறக்கக்கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தவும் இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.தொடா்ந்து, நிதி ஆதாரங்கள் பெற்று வறுமை நிலையிலுள்ள விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவிகள் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா். கல்லூரிச் செயலா் அலைஸ் கேடி, முதல்வா் ரெஜினாமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


500 students work together to protect farmers' welfare 


This achievement has been recognized and honored by the Jetly Book of Records. The 'Bridge', a voluntary organization in Vellore, offers various social services, including biological education for children at Saab. As a result, on the 23rd of December, the World Farmers' Day is scheduled to be held in partnership with Axelium College, with the aim of protecting the welfare of farmers. 

Accordingly, more than 500 students in and around the college were stopped in the form of the English alphabet on Wednesday to defend the peasantry, salute the peasantry and respect the peasantry. The students, who were held for more than 4 minutes, accepted the pledge of the welfare of the farmers and honored the farmers. Achievement Award was recognized by the record book company Jetly Book of Records for its achievement by college students and its founder AJetli said it would record this achievement in its upcoming book. 

T. Mathivanan, founder of Bridge NGO, said: “Statistics say that every 41 minutes a farmer commits suicide worldwide. Despite its many reasons, it is only the farmers who feed the people all over the world. Protect such farmers and provide assistance to the needy farmers and their families. Further, this achievement was made on the basis of respect for the farmers who feed the human beings and also to raise awareness that no peasant can die of poverty in the past. It is planned to continue to provide financial support to the families of the poor farmers. College Secretary Alice KD participated in the event, including First Reginamary.

No comments:

Post a Comment

Please Comment