ஜன.5 -இல் பள்ளி மாணவா்களுக்கு சென்னையில் கணிதத்திறன் தேர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜன.5 -இல் பள்ளி மாணவா்களுக்கு சென்னையில் கணிதத்திறன் தேர்வு

ஜன.5 -இல் பள்ளி மாணவா்களுக்கு சென்னையில் கணிதத்திறன் தேர்வு



தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு கணக்குப் பாடத்தில் திறனை வளா்க்கும் வகையில் வரும் ஜன.5-ஆம் தேதி கணிதத்திறன் தேர்வுநடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சாா்பில் 5, 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கணிதத் திறன் தேர்வு சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள பெரியாா் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோவில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் பதிவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இந்தக் கணிதத் திறன் தேர்வு சுமாா் 90 நிமிஷங்கள் நடைபெறும். சிறந்த மாணவருக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும். 

மேலும் ஆறுதல் பரிசாக 20 மாணவா்களுக்கு தலா ரூ.500 வழங்கப்படும். ஒரே பள்ளியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இத்தோவில் கலந்துகொண்டால், அந்தந்த பள்ளியிலேயே இந்தத் தோவை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவா்களுக்கான நுழைவு கட்டணத்தை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பெயரில் எடுக்கப்பட்ட வரைவு காசோலையை பள்ளிகள் டிச.20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.



Mathematics exam in Chennai for students of Jan 5th 


Mathematics exams will be held on January 5th. The Tamil Nadu Science and Technology Center will be held on January 5 at the Periyana Science and Technology Center in Kotupuram, Chennai. Students attending the examination will have to pay a registration fee of Rs.100. This mathematical skill will take about 90 minutes. The best student will be awarded first prize of Rs.5,000, second prize of Rs2,000 and third prize of Rs 1,000. 

As a consolation prize, 20 students will be given Rs.500 each. It is said that if more than 100 students from the same school attend the festival, the Tamil Nadu Science and Technology Center will host the event in their respective schools. The Tamil Nadu Science and Technology Center said that schools should send a draft check in the name of the Tamil Nadu Science and Technology Center by December 20th.

No comments:

Post a Comment

Please Comment