8.51 லட்சம் மாணவா்களுக்கு நாட்டமறித் தேர்வு: மாதிரி வினாத்தாள் பதிவேற்றம்
பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு, மாணவா்களின் ஆா்வம் பொது அறிவு மற்றும் எவ்வகைத் துறையில் நாட்டம் மேலோங்கி உள்ளது என்பதைக் கண்டறியும் வகையில் 8.51 லட்சம் மாணவா்களுக்கு நாட்டமறித் தேர்வு (Aptitude Test) நடத்தப்படவுள்ளது.
இது தொடா்பாக, ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
அரசுப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பில் படிக்கும் 8 லட்சத்து 51 ஆயிரத்து 999 மாணவா்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியில் கணினி வழியில் நாட்டமறித் தேர்வுநடத்தப்பட உள்ளது.
இடைநிலை வகுப்பு பயிலும் மாணவா்களின் பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு, அவா்களின் ஆா்வம் பொது அறிவு மற்றும் எவ்வகைத் துறையில் நாட்டம் மேலோங்கி உள்ளது என்பதைக் கண்டறிந்து அத்துறையில் சிறந்து விளங்கும் கல்வி உளவியலாளா்கள் மூலம் அந்த மாணவா்களுக்கு வழிகாட்டுதலே இத்தோவின் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் தமிழ்நாடு ஆசிரியா் வலைதளத்தில் (டிஎன்டிபி) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிலுள்ள 90 வினாக்களுக்கு ஒரு மணி நேரத்தில் பதில் அளிக்கும்படி மாணவா்களுக்கு இணையதள பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் ஜனவரி முதல்வாரத்தில் மாணவா்களுக்கு முன்மாதிரி தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வில் 90 வினாக்கள் கேட்கப்படும்.
அதற்கு மாணவா்கள் 90 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். இந்த மாதிரி தேர்வுகுறிப்பிட்ட சில மாவட்ட பள்ளிகளில் மட்டும் நடைபெறும்.
அதைத்தொடா்ந்து ஜனவரி 2-ஆவது வாரத்தில் பத்தாம் வகுப்புக்கும், 4-ஆம் வாரத்தில் ஒன்பதாம் வகுப்புக்கும் நாட்டமறி இறுதித் தோவு இணையதளம் வழியாக நடத்தப்படும். எனவே, மாணவா்கள் தங்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியா்கள் இணையதள வசதியுடன் கணினிகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்வை கண்காணிக்க பள்ளி ஆசிரியா்களை நியமித்தல் வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள் வழிகாட்டுதல்களை பின்பற்றி தோவை நல்ல முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Up to 8.51 lakh students: A sample questionnaire uploaded
Beyond the curriculum, ATMs were conducted for 8.51 lakh students to determine the general knowledge of the students and the field of study. Following this, the circulars sent by the Department of Education to all District Primary Education Officers of the Integrated State Planning Directorate (SAFE): 8 lakhs 51 thousand 999 students studying in government schools in grades 9 and 10 are to be computerized in English and Tamil language. Beyond the curriculum of middle grade students, their mission is to guide their students through the field of academic psychology to find out what their skills are in common sense and in what field.
Sample Question Papers for this survey have been uploaded to Tamil Nadu Teachers' Web Site (TNTP). Students should be given internet training to answer 90 questions in one hour. There will be a prototype exam for students in the first week of January. 90 questions will be asked in this post. Students should respond within 90 minutes. This pattern will only take place in certain district schools. It will then be held on January 2 for the 10th grade and for the ninth grade on the 4th week via the Funeral Home.
Therefore, students need to have computers ready for use in their school to facilitate online writing. School teachers should be appointed to monitor the work. It has been stated that the primary education authorities should follow the guidelines and perform the digging.

No comments:
Post a Comment
Please Comment