முதியவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்? விடை காண வேண்டிய 6 கேள்விகள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முதியவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்? விடை காண வேண்டிய 6 கேள்விகள்!

முதியவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்? விடை காண வேண்டிய 6 கேள்விகள்!



மனிதர்களுக்கான ஆயுட்காலம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய சுகாதார கணக்கெடுப்பில் இந்திய ஆண், பெண்களின் ஆயுள் சராசரியாக 19 ஆண்டுகள் அதிகரித்திருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. ஒரு மனிதனின் ஆயுட்காலம் அதிகரிப்பதன் பின்னணியில் மருத்துவத் துறையின் பங்கும் கணிசமானது என்றுதான் சொல்ல வேண்டும். மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நவீன சிகிச்சைகள் அனைத்தும் மனிதனின் வாழ்நாளை அதிகரித்து வருகின்றன.இந்தச் செய்தியின் மறுபக்கத்தில் ஓர் ஆய்வு முடிவு குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. 

சென்னையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் முதியவர்கள் ஒருநாளைக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் எண்ணிக்கை 15-ஐ தாண்டுகிறது. குறைந்தபட்சம் 2 மாத்திரைகளையாவது சாப்பிடுகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. எந்த விஷயமும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகும் என்பது நாமறிந்ததே. உடலிலுள்ள ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவரும் ஐந்தாறு மாத்திரைகளைப் பரிந்துரைக்கின்றனர். அதனால் அத்தனை மாத்திரைகளையும் சாப்பிடத்தான் வேண்டியிருக்கிறது என்பது முதியவர்களின் வாதமாக இருக்கிறது. இந்த இரண்டையும் சமன் செய்வது எப்படி?முதியவர்கள் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது தொடர்பான 6 முக்கிய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் முதியோர் நல மருத்துவர் ஹரிசங்கர். பொதுவாக 

முதியவர்கள் என்னென்ன பிரச்னைகளுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள்?60 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் முதியவர்கள் என்கிறோம். முதியவர்களுக்குப் பொதுவாக ஆறு வகையான பிரச்னைகள் ஏற்படலாம். இதயம் - ரத்தநாளம், நுரையீரல், சிறுநீரகம், ஜீரண மண்டலம், நரம்பியல், ரத்தம் தொடர்பான பிரச்னைகள். இவை தவிர, நிமோனியா, டைபாய்டு, மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய்களும் ஏற்படலாம். இவற்றுக்கெல்லாம் மேலாக `சூப்பர் ஹீரோ' போன்ற நோய் என்றால் அது சர்க்கரைநோய்தான். சர்க்கரைநோய் வந்தால் எல்லா உறுப்புகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்தநோய் வந்துவிட்டால் ஆறு பொதுவான பிரச்னைகளையும் ஏற்படுத்திவிட வாய்ப்புள்ளது. முதியவர்கள் பொதுவாக இவற்றில் ஏதேனும் மூன்று பிரச்னைகளுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

 ஏன் நிறைய மாத்திரைகள் எடுக்க வேண்டிய நிலை வருகிறது?ஒருவர் ஐந்து மாத்திரைகளுக்கு மேல் எடுத்துக்கொள்வதை `பாலி பார்மஸி' (Poly Pharmacy) என்கிறோம். இதிலுள்ள பிரச்னை என்னவென்றால் ஒருவர் சிறுநீரகப் பிரச்னைக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு சர்க்கரைநோயும் இருக்கிறது என்றால், சிறுநீரக மருத்துவர் என்னென்ன மாத்திரைகளைப் பரிந்துரைத்திருக்கிறார் என்பதை சர்க்கரைநோய் நிபுணரிடம் தெரிவிக்கமாட்டார்கள். மருத்துவர்களுக்கும் அனைத்தையும் விவரமாகக் கேட்பதற்கு நேரமில்லாமல் போய்விடுகிறது.மருத்துவர்கள் பொதுவாக `பிரவுன் பேக் டெக்னிக்' (Brown bag technique) என்பதைப் பின்பற்ற வேண்டும். ஒரு குழந்தையிடம் ஒரு சிறிய பையைக் கொடுத்தால் அதிலிருக்கும் அனைத்துப் பொருள்களையும் கீழே கொட்டி எப்படி ஆராயுமோ அதே போன்று, 


ஒரு நோயாளி என்ன மருந்துகளையெல்லாம் சாப்பிடுகிறார் என்பதை மருத்துவர்கள் முழுவதுமாக ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகள் தவிர, அஜீரணத்துக்கு, தலைவலிக்கு, மலச்சிக்கலுக்கு என்று முதியவர்களே சில மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஒரே மாத்திரையை திரும்பத்திரும்ப எடுத்துகொள்ளும் நிலை ஏற்படுமா? ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. பொதுவாக முதியோருக்கு மல்டி வைட்டமின் மற்றும் ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மாத்திரைகளைப் பல மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். உதாரணமாக, ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மாத்திரைகளை இதய மருத்துவரும் பரிந்துரைப்பார், நரம்பியல் மருத்துவரும் பரிந்துரைப்பார், சிறுநீரக மருத்துவரும் பரிந்துரைப்பார். ஒரே மாத்திரையை திரும்பத் திரும்ப எடுக்கும்போது என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? அதிக எண்ணிக்கையில் மாத்திரைகள் எடுக்கும்போதோ, ஒரே மாத்திரையை திரும்பத் திரும்ப எடுக்கும்போதோ Drug interaction என்ற நிலை ஏற்படலாம். 



Drug interaction ஏற்பட்டால் சில மருந்துகள் உடலில் வேலை செய்யாமல் போவது, சில மருந்துகளின் செயல்படும் வேகத்தை அதிகரித்தல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் உண்டாகலாம். உச்சபட்சமாக மருந்தினால் நச்சுத்தன்மை ஏற்பட்டு கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்து விளைவிக்கலாம். இது முதியவர்களிடம் காணப்படும் பொதுவான பிரச்னையாக இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் வெளியே தெரியாத பிரச்னையாகவும் இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான மாத்திரைகள் எடுப்பதைத் எப்படித் தவிர்ப்பது?எத்தனை மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றாலும் குடும்ப மருத்துவர் என்று ஒரு பொது மருத்துவரையோ முதியோர் நல மருத்துவரையோ நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். 

அவர்தான் கேப்டன் போன்று செயல்படுவார். அவர்களிடம் என்னென்ன பிரச்னைகளுக்கு என்னென்ன மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை முழுவதுமாக தெரிவிக்க வேண்டும். மருத்துவர் அனைத்து மாத்திரைகளையும் பட்டியலிட்டுப் பார்த்து தேவையில்லாத மாத்திரைகளை நிறுத்துவார். ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி மருத்துவரிடம் சிகிச்சை பெறும்போதும் ஏற்கெனவே எடுத்துக்கொள்ளும் அனைத்து மருந்துகள் பற்றியும் தெரிவித்துவிட வேண்டும். முதியவர்கள் ஒருநாளைக்கு எத்தனை மாத்திரைகள் சாப்பிடலாம்?ஒருவர் இத்தனை மாத்திரைகள்தான் சாப்பிட வேண்டும் என்று சரியாகக் கூற முடியாது. உடலில் இருக்கும் பிரச்னைகளுக்கெல்லாம் சிகிச்சை எடுக்க வேண்டியதும் தவிர்க்க முடியாது.

ஆனால், ஐந்து மாத்திரைகளுக்கு மேல் எடுத்துக்கொள்ள நேரிடும்போது, உடனடியாக குடும்ப மருத்துவர் அல்லது முதியோர் நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.சிலர் மருத்துவரை வருடக் கணக்கில் சந்திக்காமல் பல வருடங்களுக்கு முன்னால் கொடுத்த பரிந்துரைச் சீட்டை வைத்தே மாத்திரை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். இது முற்றிலும் தவறானது. முதியவர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை தங்கள் சிகிச்சை பெறும் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களைச் சந்தித்துப் பரிந்துரை பெற வேண்டும். முதியவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வது தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.




How many pills can older people take a day? 6 Questions to Ask! 


Life expectancy for humans continues to increase. A recent National Health Survey reveals that the life expectancy of Indian men and women has increased by an average of 19 years. It must be said that the role of the medical profession is considerable in the context of the prolongation of a man's life span. The advances in the field of medicine and modern therapies are increasing the life span of human beings. In a recent survey in Chennai, the number of tablets taken by the elderly per day exceeds 15. It has been found that they eat at least 2 tablets. It is known that the poison of any thing is too much. 

Every problem in the body has to be treated by every specialty doctor. Each one prescribes five to six tablets. The old people argue that it is necessary to eat all the pills. Hirishankar, a geriatrician, answers six key questions about how older people take pills. What problems do older people usually take? The elderly usually have six types of problems. Heart - blood, lungs, kidneys, digestive tract, neurological, blood related problems. In addition, pneumonia, typhoid, malaria, and dengue can also cause infections. Above all, a superhero-like disease is a disease of sugar. Diabetes can affect all organs. Six common complications are likely to occur when the disease comes. 

Older people are usually more likely to take medication for any of these three problems. Why do you need to take so many pills? We call Poly Pharmacy one person taking more than five tablets. Suppose a person takes pills for a kidney problem. If he has diabetes, the urologist will not tell the diabetic specialist what pills he has prescribed. Doctors usually have to follow the brown bag technique. Just as a baby is given a small bag, doctors must thoroughly analyze what medications a patient is taking, as well as how to take down all the ingredients. Besides the pills prescribed by doctors, the elderly take some pills for indigestion, headache and constipation. 

Will the same pill be repeated? Is more likely to occur. Many doctors prescribe multivitamins and blood-thinning pills for the elderly in general. For example, the cardiologist may prescribe pills that lower the blood density, the neurologist will prescribe, and the urologist may prescribe. What are the problems when taking the same pill repeatedly? Drug interaction can occur when taking multiple pills or repeating the same pill.Drug interactions can cause side effects, including some medications not working in the body, and some drugs speeding up. Maximum toxicity of the drug can cause liver and kidney organs and risk life. 

This is a common problem in the elderly. But it is also a problem that is often unknown. Regardless of how many doctors are treated, a general practitioner or a gynecologist should be considered a family doctor. He will act like the captain. They need to be fully informed about what pills they are taking. The doctor will list all the pills and stop the useless pills. Every specialty doctor should be informed of all medications already taken when treating. 

How many pills a day can the elderly eat? All the problems in the body need to be treated. However, when taking more than five tablets, it is advisable to consult a family doctor or a geriatrician immediately. This is totally wrong. Older people should visit their specialty physician every 3 months to receive a referral. The elderly should remember that taking self-medication without the recommendation of doctors is equivalent to suicide.

No comments:

Post a Comment

Please Comment